How to Make Quality Videos in Mobile Phone | மொபைலை பயன்படுத்தி தரமான வீடியோ எடுப்பது எப்படி?
Clean The Camera Lens | கேமரா லென்ஸை சுத்தம் செய்து கொள்ளுங்கள்
மொபைல் ஃபோன்களை நாம் கேமரா எடுப்பதற்கு மட்டும் பயன்படுத்தவில்லை மாறாக போன் பேசுதல், வீடியோ கேம் விளையாடுதல், பாடல் கேட்பது மற்றும் பிற பல விஷயங்களை நாம் மொபைல் வைத்து தான் செய்கின்றோம் இதனால் மொபைலில் இருக்கக்கூடிய கேமரா பகுதிகள் கைரேகை மற்றும் பிற தூசுக்களினால் மாசடைந்திருக்கும்.
முதலில் ஏதேனும் காட்டன் துணிகளை பயன்படுத்தி கேமராவின் லென்ஸ் பகுதிகளை துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள், இதுபோல் கேமராவின் லென்ஸை சுத்தம் செய்த பின் நாம் எடுக்கும் வீடியோக்களில் நிச்சயமாக தரம் சற்று உயர்த்தப்பட்டிருக்கும்.
Lighting Setup | லைட்டிங் அமைப்பு
வீடியோ எடுப்பதில் தரத்தை உயர்த்த மிக முக்கிய பங்கு வகிப்பது லைட்டிங் Set up தான். இதனால் தான் பல பிரபலங்கள் தான் எடுக்கும் வீடியோவில் முக்கியமாக லைட்டிங் அமைப்பில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே எடுக்கப்படும் வீடியோக்களுக்கு லைட்டிங் அமைப்பு என்பது தனியாக தேவைப்படாது ஏனேனில் நமக்கு அனைத்திலும் சிறந்த சூரிய வெளிச்சமே போதுமானது ஆனால் வீட்டிற்குள் எடுக்கப்படும் வீடியோ க்களுக்கு இது சாத்தியம் இல்லை எனவே நிச்சயமாக லைட்டிக்கில் நாம் மிக அதிக அக்கறை காட்ட வேண்டும்.
இதுபோல் நீங்கள் எடுக்கப்படும் வீடியோக்களுக்கு லைட்டிங் அதிகரிப்பதற்காக பல பிரத்தியோக கேஜெட்கள் ஆன்லைனில் உள்ளது, உதாரணமாக Ring Light போன்றவற்றை பயன்படுத்துவது. வீட்டிற்குள் எடுக்கப்படும் வீடியோக்களுக்கு Brightness பிரைட்னஸ் குறைவாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற லைட்டிங் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Camera Stability | கேமரா நிலைத்தன்மை
நீங்கள் மொபைல் போனில் வீடியோ எடுக்கும் போது கேமராவை தொடர்ந்து அசைத்துக் கொண்டிருக்கக் கூடாது, இதுபோல் நீங்கள் அதிகம் அசைத்துக் கொண்டிருந்தால் வீடியோவின் Quality குவாலிட்டி சிறப்பாக இருக்காது.
முடிந்தவரை மொபைல் போனை கையில் வைத்துக்கொண்டு வீடியோ எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நம் கையில் வைத்து வீடியோ எடுக்கும் போது எப்படியும் அந்த வீடியோ சற்று அசைவுக்குள்ளாகிவிடும்.
வீடியோ எடுக்கும் போது மொபைல் போனை பிடித்து வைத்துக்கொள்ள (Tripod) ட்ரைபாடுகளை பயன்படுத்தலாம். இது நீங்கள் எடுக்கும் வீடியோவில் தேவையற்ற அசைவுகளை குறைத்து சிறப்பான வீடியோக்களை எடுக்க உதவும்.
Camera Settings | கேமரா அமைப்புகள்
நீங்கள் வீடியோ எடுப்பதற்கு முன்னதாகவே நீங்கள் எடுக்கப்படும் வீடியோவிற்கு ஏற்ற சரியான செட்டிங்ஸை Settings நீங்கள் செய்து கொள்ள வேண்டும், குறிப்பாக Screen Size, Video Quality, Frame Rate Settings போன்றவை, உதாரணமாக நீங்கள் youtube வீடியோ அல்லது Short Film போன்ற வீடியோக்கள் எடுக்க விரும்பினால் 16: 9 என்ற Size யினையும், Youtube Shorts இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் Instagram Reels போன்ற வீடியோக்கள் தயார் செய்தால் 9:16 என்ற சைசினையும் செலக்ட் செய்து கொள்ளவும். அதுபோல வீடியோ Quality 1080P மற்றும் 30FPS என்பதனையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இது போன்ற அதிகபட்ச வீடியோ தரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும்.
Don't zoom too much into the settings | செட்டிங்ஸில் அதிகம் ஜூம் செய்ய வேண்டாம்.
மொபைல் கேமராக்களில் கொடுக்கப்பட்டுள்ள Zoom ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் ஜூம் செய்து வீடியோக்கள் எடுக்க வேண்டாம், மொபைல் கேமராக்களில் செட்டிங்ஸை பயன்படுத்தி ஜூம் செய்யும் பொழுது குறிப்பிட்ட அளவு தூரம் வரை குவாலிட்டியான வீடியோக்களை அது கையாலும் அதற்கு மேல் நீங்கள் ஆப்ஷனை பயன்படுத்தும் பொழுது வீடியோவின் குவாலிட்டி நிச்சயமாக குறைந்து விடும். அப்படி Zoom ஜூம் செய்து வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்றால் மொபைலை நேரடியாக நீங்கள் எடுக்கப்படும் பொருள் அருகாமையில் கொண்டு சென்று வீடியோக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் பொருளின் மிக அருகாமையில் வீடியோ எடுக்க விரும்பினால் மைக்ரோ போகஸ் Micro Focus என்ற செட்டிங்ஸை பயன்படுத்தி மிக அருகாமையில் வீடியோக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
Conclusion
வீடியோ எடுப்பதற்காக தொடக்கத்திலேயே அதிகம் முதலீடு செய்யாமல் மொபைல் போனிலேயே நீங்கள் இது போல் தரமான வீடியோக்களை தயார் செய்து கொள்ளுங்கள், இதுவே உங்களுக்கு மிகச் சிறப்பான வழியாகும். இதில் கூறியுள்ள விஷயங்களை சரியாக பயன்படுத்தும் போது நீங்களும் உங்கள் மொபைல் போனை பயன்படுத்தி சிறப்பான தரத்தில் வீடியோ எடுக்க முடியும்.

0 கருத்துகள்