10 Habits That Will Make You Poor | உங்களை ஏழையாக்கும் 10 பழக்கங்கள்
இப்போது உங்கள் பொருளாதார நிலையில் நீங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட இதில் கூறியுள்ள இந்த பத்து தவறுகளை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் உங்கள் பொருளாதாரம் ஒரு கட்டத்தில் வீழ்ச்சியை நோக்கி சென்று விடும். ஒருவரின் செல்வத்தை மிக வேகமாக குறைக்கும் இந்த பத்து விஷயங்களைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
இந்த பத்து தவறுகளில் நீங்கள் ஏதேனும் ஒன்றை செய்து கொண்டிருந்தால் கூட நிச்சயம் அதை கைவிட்டு விடுங்கள் ஏனென்றால் ஒரு கட்டத்தில் உங்களின் பொருளாதார நிலையை இது மிக வேகமாக வற்ற செய்துவிடும் எனவே இந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் செல்வத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
Fancy eating habits | ஆடம்பரமான உணவு பழக்கம்
உணவு என்பது நம் பசியை போக்கக்கூடிய ஒரு அடிப்படை விஷயமாகும். ஆடம்பரமான உணவகங்களில் விலை உயர்ந்த உணவுகளை உண்டு நம்மிடம் செல்வம் அதிகமாக உள்ளது என்பதை மக்களுக்கு காட்ட வேண்டாம், ஆடம்பர உணவகங்களில் உண்ணவேக்கூடாது என்று இல்லை இதனை தொடர் பழக்கமாக மாற்றிக் கொள்வது தான் தவறு. உண்மையில் உண்மையான செல்வந்தர்கள் யாரும் தன் ஆடம்பர வாழ்க்கையை மக்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், நாம்தான் அதனை தவறாக புரிந்து கொண்டு ஆடம்பரமான உணவகங்களில் விலை உயர்ந்த உணவுகளை உண்பதை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்து வருகிறோம்.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிரும் பொழுது பிறர் நம்மைப் பார்த்து புகழத் தொடங்குகின்றனர் இந்த சிறு புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு நம் பெரும் செல்வத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை, இது இப்போது பல்வேறு மக்களின் பழக்கமாகவே மாறிவிட்டது ஆனால் இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். நீங்கள் உண்மையில் செல்வந்தர் என்பதை நீங்கள் உணர்ந்தால் போதுமானது இதை பிறருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஆடம்பர வாழ்க்கையினை வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள் நீங்கள் இதுபோன்ற ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது ஒரு கட்டத்தில் உங்களிடம் செல்வம் இல்லை என்றாலும் கடன் பெற்று இது போன்ற ஆடம்பர வாழ்க்கையை நீங்கள் மக்களுக்காக வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்.
இந்தப் பழக்கம் உங்கள் செல்வத்தை இழக்க செய்துவிடும் என்பதை தாண்டி உங்களை ஒரு கட்டத்தில் பெரிய கடனாளியாகவும் மாற்றிவிடும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
Late payment of loanகடனை தாமதமாக செலுத்துவது
நம் வாழ்வில் தேவைகளை அதிகரிக்க அதிகரிக்க கடன் வாங்குவது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது, ஒரு பொருளை வாங்குவதற்கு நம்மிடம் போதுமான வருமானம் இருந்தாலும் கூட EMI இஎம்ஐ லோன்களை பெற்று விடுகிறோம். இது பொருட்களை வாங்குவதற்கு நமக்கு சுலபமான வழியாக தெரிவதன் காரணமாக வாங்கி விடுகிறோம் மற்றும் மாதம் தோறும் தொகையை பிரித்து குறைத்து செலுத்துவதன் காரணமாக இந்த கடன் ஒரு பொறுப்பு என்பதையே மறந்து விடுகிறோம்.
இந்த கடன் சுமை குறைவாக இருப்பதனால் பலரும் இதனை குறித்த நேரத்தில் சரியாக கட்டுவதில்லை எனவே தாமதமாக செலுத்துவதன் மூலமாக தேவையற்ற அபராத தொகையும் செலுத்த நேர்கிறது. இதுபோன்று தொடர்ந்து தாமதமாக செலுத்துவதன் காரணமாக ஒரு கட்டத்தில் நாம் வாங்கிய பொருளின் விலையை தாண்டியே நம் அபராதத் தொகை செலுத்தி இருப்போம் இந்த தவறை கண்டறிந்து நாம் திருத்திக் கொள்வது அவசியமான ஒன்றாகும். மாறாக இது போல் வாழ்நாள் முழுவதும் பல இஎம்ஐ லோன்களையும் பொருட்களையும் வாங்கி தாமதமாக செலுத்தி தேவையற்ற அபராதம் செலுத்தி நம் பணத்தை இழக்க வேண்டாம்.
Eating out daily தினமும் வெளியே சாப்பிடுவது
தினமும் வெளி உணவகங்களில் உண்ணும் பழக்கமும் நாம் செல்வத்தை இழக்க செய்யும் காரணியாகும் மற்றும் இது நம் பொருளாதார வீழ்ச்சியை தாண்டி உடல் நலத்தையும் கெடுக்கும் பழக்கமாகும். வேலை பளு காரணமாக நேரம் மிக குறைவாக இருக்கும் பட்சத்தில் மட்டும் நாம் வெளி உணவுகளை உண்ணலாம ஆனால் தொடர் பழக்கமாக வைக்கக் கூடாது.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் நம் உடல் நலத்தை கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான உணவை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும் மாறாக தொடர்ந்து வெளி உணவகங்களில் உண்பதன் காரணமாக நாம் எதிர்பார்க்காத நேரங்களில் தேவையற்ற உடல் கோளாறுகள் காரணமாக தேவையற்ற சிகிச்சை செலவுகள் செய்ய நேரிடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Unused subscription | பயன்படுத்தப்படாத சந்தா
நம் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாத சில சந்தா தொகைகளை கட்டுவது நம் செல்வத்தை கண்டிப்பாக குறைக்கும். இப்போது நம் கைப்பேசியில் பாடல் கேட்பது முதல் படம் பார்ப்பது வரை அனைத்து விஷயத்திற்கும் சில குறிப்பிட்ட சந்தா தொகையை கட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம். இதில் சந்தா தொகை செலுத்துவது தவறல்ல ஆனால் நம் செலுத்தும் சந்தா தொகை நமக்கு எவ்விதத்தில் உதவும் என்பதை அறிந்தே நாம் செலவு செய்ய வேண்டும்.
உதாரணமாக சிலருக்கு படம் பார்ப்பதும் பாடல் கேட்பதற்கும் கூட நேரம் மற்றும் ஆர்வம் இல்லை என்றாலும் சந்தா தொகை செலுத்தி சந்தாதாரர்களாக மாறிக் கொள்கின்றனர்.
எப்போதாவது படம் மற்றும் பாடல் கேட்கும் நபர்கள் எல்லாம் இலவச ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம், நம் வாழ்க்கையில் பொழுதுபோக்கு என்பது நிச்சயம் அவசியமான ஒன்றுதான் ஏனென்றால் பொழுதுபோக்குதான் நம் வேலைபளுவை சற்று குறைக்கும் ஆனால் நல்ல பொழுதுபோக்குகளை நாம் தேர்ந்தெடுப்பது நம் கடமையாகும். கேம் விளையாடுவது பாடல் கேட்பது படம் பார்ப்பது இதற்கு மாறாக புத்தகம் படிப்பது மூளைக்கு வேலை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
நம் செலவு செய்யும் தொகை புத்தகங்களுக்கும் உடற்பயிற்சி செய்யும் சாதனங்களுக்கும் இருக்கும் பட்சத்தில் நம் உடல் மற்றும் மனநலத்தை மேன்மேலும் வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்.
Paid application | பணம் செலுத்தும் App
அதிகப்படியான கட்டணம் செலுத்தக்கூடிய ஆப்களை தொடர்ந்து பயன்படுத்துவது நம் பணத்தை தேவையற்ற வகையில் அதிகம் செலவு செய்ய நேரிடுகிறது, பல கட்டணம் செலுத்தக்கூடிய ஆப்கள் செய்யும் விஷயங்களை சில இலவச ஆப்களும் செய்ய வல்லமையாக உள்ளது இதனை நாம் அதிகம் ஆலோசனை செய்து நாம் இலவச ஆப்களை பயன்படுத்துவது மிகச் சிறப்பாக இருக்கும் இது போன்று நாம் கட்டணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய ஆப் கள் நம் செல்வம் அல்லது வாழ்வின் ஏதேனும் ஒரு வளர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தால் நிச்சயமாக கட்டணம் செலுத்தி ஆப்களை பயன்படுத்தலாம் மாறாக பயனற்ற பல ஆப்களை கட்டணம் செலுத்தி பயன்படுத்துவதும் நம் செல்வத்தை விரைவாக இழக்க செய்யும்.
Ignorance of the discount price | தள்ளுபடி விலை பற்றி அறியாமல் இருப்பது
நம் வாங்கும் பொருள் எந்த இடத்தில் குறைவான விலையில் கிடைக்கும் என்பதை அறிந்து வாங்க வேண்டும், உதாரணமாக நாம் வாங்கக்கூடிய ஒரு சட்டையின் விலை 500 ரூபாய் என்றால் அதே சட்டை வேறொரு இடத்தில் 300 ரூபாயிலும் கிடைக்கலாம்.
ஏன் இது போல் கடைக்குக் கடை விலை மாறுதல் இருக்கிறது என்றால் ஒவ்வொரு கடைக்காரர்களும் ஒவ்வொரு இடத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்கின்றனர் சிலர் உற்பத்தியாளர்களிடம் இருந்து சிலர் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி விற்பவர்களிடமோ வாங்குகின்றனர் இதனால் விலை என்பது மாறுதல் ஏற்படுகிறது மற்றும் ஒரு சில கடையினர் வியாபாரத்தை அதிகரிப்பதற்காக தள்ளுபடி மற்றும் கூப்பன் என்ற பெயரில் விலை மலிவாக பொருட்களை விற்கின்றனர். எனவே நாம் பொருளை வாங்குவதற்கு முன்னர் எந்த இடத்தில் அந்த பொருள் விலை மலிவாகவும் தரமாகவும் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்து அந்த பொருளை பெறுதல் வேண்டும், இந்தப் பழக்கம் நம் செல்வத்தை சற்று தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் சிறிது அளவு சேமிக்கவும் உதவும்.
Unnecessary vehicle use | தேவையற்ற வாகன பயன்பாடு
இப்போதுள்ள காலகட்டத்தில் வாகன பயன்பாடு என்பது பெரும் அளவு அதிகரித்துள்ளது, மற்றும் வாகனங்கள் நாம் நினைத்த இடத்தை நினைத்த நேரத்தில் செல்வதற்கும் பெருமளவு உதவுகிறது. இந்த வாகனங்களை நாம் தவறான முறையில் பயன்படுத்தும் பொழுதும் நமக்கு தேவையற்ற செலவுகளை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இது குறிப்பிட்ட காலத்தில் நம் செல்வத்தையும் அதிகளவில் இழக்க செய்துவிடும். உதாரணமாக நடந்து செல்லும் தூரத்திற்கெல்லாம் அடிக்கடி வாகனங்களை பயன்படுத்துவது மிகப் பெரும் தவறாகும் இது எரிபொருள் செலவை அதிகரிக்கிறது மற்றும் நடைப்பயிற்சி என்பதை மறக்கச் செய்து உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது.
இதுபோல் நடந்து செல்லும் இடத்திற்கெல்லாம் தொடர்ந்து வாகனங்களை பயன்படுத்திக் கொண்டே இருக்கும் பொழுது வாகனங்களும் விரைவில் பழுதாகி நமக்கு தேய்மானச் செலவுகளை அதிகரித்து விடுகிறது. இதற்கு மாறாக வெளி பயணம் செல்லும் பொழுது சற்று பொது போக்குவரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் இந்தப் பழக்கம் நம் செல்வத்தை தக்க வைத்துக் கொள்ள பெரும் அளவு உதவி செய்யும்.
Buying more expensive dresses | விலை உயர்ந்த ஆடைகளை அதிகம் வாங்குவது
சிலர் விலை உயர்ந்த உடைகளை அதிகம் வாங்கி வைத்துக் கொள்வதை தன் பழக்கமாக வைத்துள்ளனர். இன்னும் சிலரோ விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி ஒன்று அல்லது இரு முறை மட்டுமே பயன்படுத்துகின்றனர் அடுத்தடுத்த முறை இன்னும் வேறு சில ஆடைகளை தொடர்ந்து வாங்கி கொள்ளுகின்றர்.
இது ஒரு மோசமான நிதி பழக்கமாகும். பல பெரிய செல்வந்தர்கள் எல்லாம் அவர் உடையை பார்த்து இவர் மிகப்பெரிய செல்வந்தர் என்பதை அறியவே முடியாது அது போல் அவர்களின் உடை மிக எளிமையாக தான் இருக்கும். நாம் தான் பல திரைப்படங்களைப் பார்த்து திரைப்படங்களில் வரும் செல்வத்தர்களின் வாழ்க்கையை வாழ நினைக்கின்றோம்வாழஆனால் உண்மையான செல்வந்தர்களின் அடையாளம் உடை அல்ல மாறாக அவர்களின் அறிவும் திறமையும் தான்.
எனவே இது போன்ற ஆடம்பர ஆடைகளை பயன்படுத்தி தன் நிதி நிலையை குறைத்துக் கொள்ள வேண்டாம்.
Living without a budget | பட்ஜெட் இல்லாமல் வாழ்வது
நம் நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை பற்றியும் நாம் நிதியை எவ்வாறு பெருக்குவது என்பதை பற்றியும் நாம் அறிவதற்கு மிக முக்கியமான ஒன்று பட்ஜெட் தான்.
நம் பட்ஜெட் போட்டு கணக்கு செய்வதனால் எதற்கு நாம் அதிகம் செலவு செய்கிறோம் என்பதையும் எது அத்தியாவசிய செலவு என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.
நாம் பட்ஜெட் போடும் பொழுது நம் வருமானத்திற்கு ஏற்ப எந்தெந்த செலவுகளை நாம் முக்கியமாக செய்யலாம் என்பதனையும் எவ்வளவு தொகை சேமிக்கலாம் என்பதையும் கருத்தில் கொண்டு வாழலாம். பட்ஜெட் என்றால் என்ன எந்தெந்த விஷயத்திற்கு நாம் முக்கியமாக செலவு செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அறிந்து சரியான முறையில் சேமித்து வரும் பொழுது ஒரு கட்டத்தில் நீங்கள் மிகப்பெரிய தொகையை சேமித்து நல்ல நிலையை அடையலாம். ஆனால் இது போன்ற பட்ஜெட் விதிமுறைகளை அறியாமல் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் முழுவதுமாக குறைந்து ஒரு கட்டத்தில் நீங்கள் நிதி அற்ற நிலையை அடைவீர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
Not maintaining physical health | உடல் நலத்தை பேணாமல் இருத்தல்
நாம் பணம் சேர்க்கும் ஆசையில் ஓடிக்கொண்டே இருக்கும் பொழுது நாம் உடல் நிலை வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
நம் முழு எண்ணங்களும் வேலை செய்வது மற்றும் பணம் ஈட்டுவதை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது மாறாக உடல் நலத்தையும் பேணி காக்க வேண்டும். நாம் இழந்த செல்வத்தைக் கூட பெற்றுக் கொள்ளலாம் ஆனால் உடல் நலத்தை சரியாக காக்கவில்லை என்றால் நாம் பிற்காலத்தில் வருத்தம் படக்கூடிய நிலை ஏற்பட்டு விடும்.
பொருளாதார நிலையில் நாம் சிறப்பாக இருப்பதை தாண்டி உடல் நலத்திலும் நாம் சிறப்பாக இருத்தல் வேண்டும் ஏனென்றால் நாம் அதிகம் உழைத்து சேமித்த பணம் யாவும் நம் உடல் நலத்தை காப்பதற்காக அதிகம் செலவு செய்ய நேரிடும்.
எனவே நாம் நன்றாக இருக்கும் பொழுது உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் நல்ல உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவு பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம்மை முதுமையிலும் இன்பமாக மற்றும் இறுதிவரை செல்வத்துடன் வாழவும் உதவி செய்யும்.

0 கருத்துகள்