10 One Time Investment Business | ஒரு முறை மட்டும் முதலீடு செய்யும் 10 தொழில்கள்
- Electronic Repair Shop
- Photo Studio
- Hair Cut Business
- Xerox Business & Printing Business
- Vehicle Mechanic
- Event decorator
- Beauty Parlour Business
- Rental Business
- Computer Center
- Car Washing Business
நீங்கள் பொதுவாக ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்றால் அதற்கு முதலீடு என்பது நிச்சயம் தேவைப்படுகிறது, இதிலும் சில வகையான தொழில்களுக்கு நாம் அன்றாடம் தினசரி முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
உதாரணமாக இது போன்ற தொழிலில் ஒரு பெரும் சிக்கல் உள்ளன என்னவென்றால் உங்களின் தினசரி கிடைக்கக்கூடிய லாபத்தை தாண்டி தேவை இருக்கும் பட்சத்தில் முதலீடிலிருந்து ஏதேனும் தொகையை எடுத்து விட்டீர்கள் என்றால் அந்த தொகை அடுத்த நாள் முதலீடு செய்வதற்கு உங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுத்தும் இதனால் வியாபாரம் பாதிக்கப்படும், இதுபோல் கிடைக்கக்கூடிய தொகையை நீங்கள் அடுத்த நாள் முதலீடுக்கு எடுத்து வைத்து பின்னரே உங்கள் செலவை நிர்வகிக்க முடியும், மற்றும் இதுபோன்ற தொழிலில் ஏதேனும் நஷ்டம் ஏற்படும் பொழுது அந்த முதலீட்டை சரி செய்வதற்கு நீங்கள் பிற இடங்களில் இருந்து தொகையை சேகரித்து இந்த தொழிலில் செலுத்த வேண்டும்.
ஆனால் இப்படி இல்லாமல் நீங்கள் ஒரு தொழிலை துவங்கும் பொழுது செய்யக்கூடிய முதலீடு மட்டும் வைத்து தினசரி வருமானத்தை அப்படியே செலவு செய்யும் வகையில் இருந்தால் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும் அல்லவா? இதே போல் இந்த கிடைக்கும் வருமானம் முழுவதையும் நீங்கள் எடுக்கும் பொழுதும் உங்களுக்கு அடுத்த நாள் தொழில் தொடங்க எந்தவித முதலீடும் செலுத்தாமல் நீங்கள் அப்படியே தொடர்ந்து தொழிலை நடத்திக் கொண்டே இருக்கலாம் என்றால் இந்த வகை தொழில் நமக்கு மிகவும் பயனுள்ள வகையிலும் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டாத வகையில் இருக்கும்.
இது போன்று தொழில் துவங்கும் பொழுது செய்யக்கூடிய முதலீடை வைத்து தொடர்ந்து தொழிலை நடத்தக்கூடிய பத்து வகையான தொழில்களைப் பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்து ஆரம்பிக்கக்கூடிய 10 விதமான தொழில்களை பற்றி பார்க்கலாம், ஆனால் இந்த பத்து தொழில்களிலும் தினசரி ஏதேனும் சிறுசிறு செலவுகள் செய்ய நேரிடலாம் ஆனால் மிகப் பெரிய முதலீடாக செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
முடி அலங்கரிக்கும் தொழில் | Hair Cut Business
நீங்கள் முடி திருத்தம் செய்யக்கூடிய தொழிலை துவங்குவதற்கு உங்களிடம் மிகப்பெரிய முதலீடு வேண்டாம் அதற்கு மாறாக இதற்கு தேவையான சிறு சிறு பொருட்களை முதலில் வாங்கிக் கொள்ள வேண்டும் மற்றும் இந்த தொழிலுக்கு ஏற்றார் போல இடத்தை அலங்கரித்துக் கொள்ள உண்டாகும் செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.
எவ்வகை செலவுகள் இந்த தொழிலை துவங்குவதற்காக நீங்கள் செய்யக்கூடிய முதலீட்டு செலவாகும் இதைத் தாண்டி தினசரி செலவுகள் என்பது உங்களுக்கு மிக மிக குறைவாகவே இருக்கும் உதாரணமாக இதில் ஏதேனும் பொருட்கள் பழுதடைந்து இருந்தால் அதை மாற்றுவதற்கு உண்டான செலவுகள் மற்றும் சில அலங்கரிப்பு பொருள்கள் வாங்குவதற்கு உண்டான செலவுகள் அடங்கும்.
எலக்ட்ரானிக் பழுது நீக்கம் தொழில் | Electronic Repair Shop
இவ்வகை சாதனங்களை பழுது நீக்கும் தொழிலை துவங்குவதற்கும் நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வரும், இதில் தினசரி வரக்கூடிய பொருள்களை பழுது நீக்குவதற்கு உண்டான திறமையை வைத்து நீங்கள் நல்ல லாபத்தை பெறலாம்.
இந்த தொழிலில் வரக்கூடிய வருமானத்தையும் உங்கள் செலவுக்காக முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளலாம் மறுநாள் தொழில் நடத்துவதற்கு எந்தவித முதலீடும் அதிகம் செலுத்த வேண்டியதில்லை சிறு சிறு செலவுகளை செய்ய நேரிடலாம் இது மிகப்பெரும் சுமையாக இருக்காது.
வாகன மெக்கானிக் | Vehicle Mechanic
இந்த தொழிலை செய்வதற்கும் உங்களுக்கு திறமை என்பதன் நிச்சயம் தேவைப்படுகிறது.இதற்கு உண்டான திறமையை முதலில் கற்று தேர்ந்து விட்டால் இந்த திறமையை பயன்படுத்தி நீங்கள் தொழிலை ஆரம்பித்து விடலாம்.சிறப்பாக தொழிலை நடத்தி நல்ல லாபத்தை பெறலாம்.
புகைப்பட ஸ்டுடியோ | Photo Studio
இந்த புகைப்பட ஸ்டூடியோ தொழில் ஆரம்பிப்பதற்கு ஆரம்பத்தில் உங்களுக்கு முதலீடு தேவைப்படும் பின்னாளில் இந்த தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு செலவு மிக குறைவாகவே இருக்கும் இதன் மூலம் உங்களுக்கு நல்ல லாபத்தையும் பெறலாம்.
புகைப்படம் சார்ந்த துறைகளில் உங்களுக்கு நல்ல ஆர்வம் இருக்கும் பட்சத்தில் இந்த தொழிலை தொடங்கி நல்ல கலைத்துவமான புகைப்படங்களை எடுத்து நல்ல லாபத்தை பெறலாம்.
நகல் எடுக்கும் தொழில் | Xerox Business
இந்த தொழிலை துவங்க ஆரம்பத்தில் உங்களுக்கு கணினி மற்றும் நகல் எடுக்கும் இயந்திரம் தேவைப்படும், உங்கள் தொழிலுக்கு ஏற்ற நல்ல இடத்தை தேர்ந்தெடுப்பது போன்ற விஷயத்தில் மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய வேண்டி வரும்.
நகல் எடுக்க பயன்படும் பேப்பர் மற்றும் மைகளை ஆரம்பத்தில் நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளும் பொழுது தினசரி உங்களுக்கு எவ்வித செலவு இல்லாமல் தொழிலை நன்றாக நடத்தலாம், நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தை பொறுத்து உங்களுடைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொருத்தும் உங்கள் லாபம் தீர்மானிக்கப்படுகிறது எனவே சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நல்ல லாபத்தை பெரும் தொழில் தான் இந்த ஜெராக்ஸ் மிஷின் தொழில்.
பிரிண்டிங் தொழில் | Printing Business
இந்த பிரின்டிங் தொழில் என்பது உங்களின் வாய்ப்புகளை விரிவு செய்யக்கூடிய தொழிலாகும் நீங்கள் ஆரம்பத்தில் பிரின்டிங்க்கு தேவையான மெஷின்களையும் அதற்கு தேவைப்படும் கேபிள் ஒயர்களையும் மட்டுமே நீங்கள் முதலீடு செய்வீர்கள் இதற்கு உங்கள் மிஷினை பொறுத்து அதன் உற்பத்தி திறனும் அதிகரிக்கும் அதற்கு ஏற்றார் போல மெஷின்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் தொழில் துவங்கிய ஆரம்ப காலகட்டத்தில் சில சேவைகளை மட்டும் தொழில் செய்யலாம் பின்னர் உங்கள் தொழிலின் விரிவாக்கத்திற்கு ஏற்ப நீங்களும் உங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
இதில் புத்தகம் பிரின்டிங் செய்தல் புகைப்படம் பிரின்டிங் செய்தல் பத்திரிகைகள் பிரின்டிங் செய்தல் இதே போல் பேனர் தொழிலுக்கான விசிட்டிங் கார்டுகள் பிரிண்டிங் செய்வது என பல்வேறு சேவைகளை செய்யலாம். இந்த தொழிலை துவங்குவதற்கு ஆரம்பத்தில் நல்ல இடத்தையும் மற்றும் அதற்கான வாடிக்கையாளர்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும், பின்னர் உங்கள் திறமைக்கேற்ப உங்கள் தொழிலை நன்கு விரிவுபடுத்தி நல்ல லாபத்தையும் பெறலாம்.
நிகழ்ச்சி அலங்கரிப்பாளர் | Event Decorator
இப்போது மக்கள் தம்முடைய எந்தவித இன்ப துன்ப நிகழ்ச்சிகளையும் மக்களை வரவழைப்பதற்காக தன் இடத்தை நன்கு அலங்கரித்து வைத்துக் கொள்கின்றனர் இதற்கு வண்ண பல்புகளை ஒளிரச் செய்தல் பாடல் கருவிகளை இயக்குதல் போன்ற பல விஷயங்களை ஏற்படுத்துகின்றனர்.
இது போன்ற மக்கள் தேவைக்கேற்ப நிகழ்ச்சிகளை அலங்கரித்து தருபவர் தம்முடைய பொருள்களை ஒவ்வொரு மக்களுக்கும் புதிதாக வாங்க மாட்டார் மாறாக ஒரு முறை வாங்கிய பொருளை பல்வேறு மக்களுக்கும் உபயோகித்து நல்ல லாபத்தை பெறுவார்.
பெரும்பாலும் இது போன்ற அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் மிக சுலபமாக வீணாகாத பொருட்களாகவே இருக்கும் இதுபோன்று நீங்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்து பொருள்களை வாங்கும் பொழுது நல்ல தரமான பொருட்களை வாங்கி இந்த பொருட்களை பயன்படுத்தி நிகழ்ச்சி அலங்கரிப்பு காண்டாக்ட் போன்ற விஷயங்களை மேற்கொண்டு நல்ல லாபத்தை பெறலாம்.
இந்த நிகழ்ச்சி அலங்கரிப்பு தொழிலை துவங்குவதற்கு தேவைப்படும் பொருள்களை வாங்கி கொள்வதும் மற்றும் நிகழ்ச்சிகளை எவ்வாறு அலங்கரிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வதும் உங்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
அழகு நிலைய தொழில் | Beauty Parlour Business
பொதுவாக இந்த பியூட்டி பார்லர் பிஸ்னஸை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு ஒப்பனை திறமையை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும், பின்னர் இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு தேவையான உபகரணங்களையும் மற்றும் அதற்கு உண்டான இடங்களை தயார் செய்வதிலும் தான் உங்கள் முதலீடு இருக்கப்போகிறது இந்த முதலீடை தாண்டி நீங்கள் தினசரி செலவு என்பது மிக மிக குறைவு தான்.
வாடகை தொழில் | Rental Business
வாடகை தொழில் என்பது நீங்கள் எந்த வித பொருளையும் இப்போது உள்ள காலகட்டத்தில் வாடகைக்கு விடலாம் உதாரணமாக உங்களிடம் இருக்கக்கூடிய இடம் வாகனம் பயன்படுத்தாத அறை பிற உபகரணங்கள் என பல்வேறு விஷயங்களை வாடகைக்கு கொடுக்க முடியும்.
இந்தத் தொழிலை நீங்கள் துவங்குவதற்கு நீங்கள் என்ன பொருளை வாடகைக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது உங்களிடம் எந்தவித பொருட்களும் இல்லை என்றால் நீங்கள் புதிதாக ஏதேனும் ஒரு வாகனத்தை வாங்கி வாடகைக்கு விடுமாறு இருந்தாலும் அல்லது இடத்தை வாங்கி இடத்தை வாடகைக்கு விடுமாறு இருந்தாலும் அந்த பொருட்களை வாங்குவதற்கு உண்டான செலவை உங்களின் முதலீடாகும் இந்த முதலீடு தாண்டி பின்னர் நீங்கள் வாடகை வருமானத்தை பெறுவீர்கள், இந்த தொழிலுக்கு நீங்கள் அதிகப்படியான உழைப்பு செலுத்த வேண்டி இருக்காது. மாறாக உங்களின் பொருட்களை உங்களுக்கான வருமானத்தை சேமித்து கொடுக்கும்.
கம்ப்யூட்டர் சென்டர் | Computer Center
இப்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு நபர்களுக்கும் இணைய வழி சேவை என்பது நிச்சயம் தேவைப்படுகிறது நீங்கள் கணினியை முதலீடாக வைத்து மற்றும் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து இந்த தொழிலை துவங்கும் பொழுது பிறருக்கு நல்ல இணைய வழி சேவைகளை அழித்து நல்ல வருமானத்தை பெறலாம.
இதற்கான முதலீடு எல்லாம் உங்களுடைய கணினி சார்ந்த பொருட்கள் வாங்குவதும் மற்றும் இடத்தை தயார் செய்வதுமே ஆகும் பின்னர் உங்களின் இணையதளத்திற்கு உண்டான சந்தா தொகையை செலுத்துவது போன்ற முதலீடு மட்டுமே இதில் அடங்குகிறது, இதில் பல இணைய சேவைகளை பிறருக்கு அளித்து நீங்கள் வருமானம் பெறலாம்.
வாகனம் கழுவும் தொழில் | Car Washing Business
இந்த தொழிலுக்கு நீங்கள் வாகனங்களை கழுவுவதற்கு பயன்படக்கூடிய மெஷின்களை வாங்குவதற்கு முதலீடு தேவைப்படுகிறது இதற்கு நீங்கள் துவங்கும் பொழுது மட்டுமே வாங்குவீர்கள் பின்னர் இதற்கு தேவையான இடங்களில் முதலீடு செய்வது போன்றவை மட்டுமே முதலீடு ஆகும்.
நீங்கள் இந்த தொழிலை ஆரம்பிக்கும் பொழுது மட்டுமே இந்த முதலீட்டை செய்வீர்கள் பின்னாளில் வரக்கூடிய வாகனங்களுக்கு இந்த பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்து அதற்கான தொகையை பெறுவீர்கள் இது இப்பொழுது நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய தொழிலாகவும் உள்ளது.
இதில் நான் கூறியுள்ள இந்த பத்து விதமான தொழில்கள் துவக்கத்தில் செய்யக்கூடிய முதலீடை மட்டும் வைத்து இயங்கக்கூடிய தொழில்களாகும் பின்னர் நீங்கள் முதலீடு செய்த பொருள்களில் ஏற்படக்கூடிய பழுதுகளை நீக்குவதற்கு உண்டான செலவுகளும் அல்லது அந்த பொருள்கள் முற்றிலுமாக பயனடை பயனில்லாமல் போகும்போதும் மீண்டும் முதலீடு செய்வீர்கள், இதில் கூறியுள்ள இந்த பத்து விதமான தொழில்களில் சில தொழில் நல்ல வருமானத்தையும் சில தொழில் குறைவான வருமானத்தையும் அளிக்குமாறு உள்ளது ஆனால் இந்த பத்து தொழில்களுமே உங்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை அளிக்காத தொழில்களாகும். இந்த பதிவின் மூலம் நீங்கள் நிச்சயம் பயன் பெறுவீர்கள் என நம்புகிறேன்.

0 கருத்துகள்