10 Side Income Ideas Tamil

10  கூடுதல் வருமான வழி | 10 Side Income Ideas Tamil

10 side income ideas

  • ஆன்லைனில் பாடம் எடுப்பது
  • பங்கு சந்தை முதலீடு
  • youtube சேனல்
  • புத்தகம் எழுதுதல்
  • ப்ராஜெக்ட் விற்பனை
  • எடிட்டிங் வருமானம்
  • இடைத்தரகர்
  • வட்டி வருமானம்
  • அப்லைட் மார்க்கெட்டிங்
  • வாடகை வருமானம்


இதில் நான் கூறியுள்ள இந்த பத்து வழிகளை பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கு நீங்கள் அதிகப்படியான நேரம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை மற்றும் எளிமையாக செய்யும் வகையிலும் இருக்கும். எளிமையான பணிகளை மேற்கொண்டு குறைவான நேரத்தில் பணம் ஈட்டக்கூடிய ஒரு பத்து வழிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வருமானம் ஈட்டக்கூடிய 10 வழிமுறைகள் கல்வி கற்கக்கூடிய மாணவர்கள் அல்லது வீட்டில் பணியற்று இருக்கக்கூடிய இல்லத்தரசிகள் மற்றும் வேலை செய்து கொண்டே கிடைக்கக்கூடிய சிறிய நேரத்தை பயன்படுத்தி வேறு ஏதேனும் வருமானம் ஈட்ட முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கும் பல நபர்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும். 


ஆன்லைனில் பாடம் எடுப்பது | Online Tutorial Class

உங்களுக்கு தெரிந்தவற்றை ஆன்லைனில் பாடமாக எடுப்பது மூலம் நல்ல வருமானத்தை பெறலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் உங்களுக்கு என்ன விஷயம் தெரியும் என்பதை அப்படியே வீடியோவாக எடுத்து நீங்கள் ஆன்லைனில் பதிவேற்று நல்ல வருமானம் பெறலாம் உதாரணமாக சமையல், நடனம், பாடல் அல்லது மற்ற கலைத்திறன்கள் எதுவானாலும் நீங்கள் ஆன்லைனில் பணமாக மாற்றலாம்.நீங்கள் கற்றுக் கொடுக்கக்கூடிய பாடம் யாரோ ஒருவருக்கு உதவியாக இருக்கலாம் எனவே இது போன்று உங்களுக்கு தெரிந்தவற்றை பாடமாக ஆன்லைனில் எடுப்பதன் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெறலாம். 

Example: 

Music Class, Dancing Class, Skill Tutorial, Cooking, School Education.. 


பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது

உங்களிடம் இருக்கக்கூடிய பணத்தை பங்கு சந்தைகளில் சரியான அறிவுடன் முதலீடு செய்யும் பொழுது அதில் இருந்து நல்ல வருமானத்தை பெறலாம், இதற்கு முதலில் பங்கு சந்தைகளைப் பற்றிய முழு விவரத்தையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்று பங்கு சந்தைகள் எவ்வாறு செயல்படுகிறது எவ்வாறு பணம் ஈட்ட முடியும் என்பதை பற்றி நீங்கள் ஆன்லைனில் வீடியோவாகவும் அல்லது புத்தகங்களாகவும் இலவசமாக படித்து தெரிந்து கொள்ள முடியும், இதில் போதுமான அளவு விஷயங்களை கற்றுத் தேர்ந்த பின்னர் உங்கள் பணத்தை முதலீடு செய்வதனால் குறிப்பிட்ட காலத்தில் அதற்கான பலனை பெறலாம். 


youtube சேனல்

youtube சேனலில் உங்களுக்கு தெரிந்த பலவற்றை பதிவு செய்து நல்ல வருமானத்தை பெறலாம், இது பல்வேறு நபர்கள் பயன்படுத்திய வரும் சிறப்பான தளமாகும். இதற்கும் எப்படி வீடியோ தயார் செய்வது எடிட் செய்வது அப்லோட் செய்வது போன்ற அடிப்படையான விஷயங்களை ஆன்லைனில் கற்று தேர்ந்த பின்னர் இதில் உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலனையும் நல்ல வருமானத்தையும் பெறலாம், 

Example: 

Vlogging Channel, Cooking Channel, Tech Channel, Comedy Channel, Education Channel.. More. 


புத்தகம் எழுதுதல்

உங்களுக்கு எழுதும் திறன் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற புத்தகங்களை எழுதி ஆன்லைனில் விற்று நல்ல வருமானத்தை பெறலாம். புத்தகம் வாசிப்பதற்கென்று பல நபர்கள் உள்ளன இதுபோல் சில விஷயங்களை சுவாரசியமாக வாசித்து தெரிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே நீங்கள் எழுதக்கூடிய புத்தகம் நல்ல சுவாரஸ்யமான கதைகளையும் அல்லது வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான கருத்துக்களை அடங்கியும் இருக்கும் பட்சத்தில் அதனைப் படிப்பதற்கு பலரும் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதை விற்பது அல்லது வருமானம் ஆக்குவது என்பது மிகவும் எளிது இதனை விற்பதற்கு பல சோசியல் மீடியாக்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், உங்கள் கருத்துக்களை புத்தகமாக அச்சடிக்க வேண்டிய அவசியம் இல்லை இப்போதுள்ள காலகட்டத்தில் பலரும் மொபைல் போனிலேயே புத்தகத்தை படிக்கின்றனர் மொபைல் போனில் படிப்பதற்கு ஏற்றார் போல பிடிஎஃப் ஃபைலாக தயார் செய்து கொள்ளுங்கள் இந்த pdf பைலை விற்பதும் பரிமாற்றுவதும் மிக எளிமையான விஷயமாகும், pdf பேஜ் இன் முதல் பக்கத்தில் உங்கள் புத்தகத்திற்கு ஏற்ற மக்களை கவரும் படியான புகைப்படத்தை இணைக்கலாம். இதனை ஆன்லைனில் விளம்பரம் படுத்துதல் மூலம் பலரும் வாங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன, இதுபோன்ற இணைய வழி புத்தகங்களை விற்பதற்கு என்று பல இணையதளங்கள் உள்ளன இதனை பயன்படுத்தியும் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம். 


உங்கள் திட்டத்தை வியாபாரம் ஆக்குங்கள் (project Selling) 

உங்களுடைய திட்டம் பல்வேறு துறையில் இயங்கிக் கொண்டிருக்க கூடிய நபர்களுக்கு அவசியமாக தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கலாம் எனவே அது போன்ற நபர்களை தேடி அவர்களுக்கான திட்டங்களை சரியாக வடிவமைத்து கொடுப்பதன் மூலம் ஒரு வருமானத்தை பெறலாம். உதாரணமாக பள்ளி மாணவர்கள் முதல் பெரிய பொறியாளர்கள் வரை அவர்களுக்கு என்ற சரியான ஓர் திட்டம் தேவைப்படும் அல்லது அவர்களின் மனதில் இருக்கக்கூடிய திட்டத்தை பொருளாக வடிவமைத்துக் கொடுக்கக்கூடிய திறனும் தேவைப்படும் அவர்களின் நேர குறைபாட்டாலும் அல்லது பிற பணிகளை மேற்கொள்வதாலும் இது போன்ற ப்ராஜெக்ட்களை பிற நபர்களுக்கு அளிப்பார்கள் அதுபோன்ற விஷயங்களை நீங்கள் சரியாக கையாள்வீர்கள் என்றால் இது போன்ற நபர்களை பயன்படுத்தி உங்கள் வருமானத்தை நல்ல முறையில் ஏற்படுத்திக் கொள்ளலாம். 

Example: 

Mini School Project Selling, Construction Project, Technology Project, Business Project... More. 


எடிட்டிங்

இப்போது போட்டோ எடிட்டிங் வீடியோ எடிட்டிங் என பல எடிட்டிங் துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது இது போன்ற எந்தெந்த இடங்களில் எடிட்டிங் கள் தேவைப்படுகிறது என்பதை முதலில் சரியான பட்டியலை தயார் செய்து அது போன்ற நபர்களுக்கு உங்கள் எடிட்டிங் சேவையை அளித்து நல்ல வருமானத்தை பெறலாம். இதற்கு எடிட்டிங் பற்றிய திறமைகளை நீங்கள் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும், போதுமான அளவு திறனை பெற்ற பின்னர் எந்தெந்த இடங்களில் போட்டோ வீடியோ எடிட்டிங் காண அவசியம் உள்ளது என்பதை பார்த்து அவர்களுக்கு பணி செய்து நல்ல வருமானத்தை பெறலாம். 

Example: 

Video Editing, Photo Editing, Logo Editing,.. More. 


இடைத்தரகர்

இப்பொழுது நாம் பார்க்கக்கூடிய பல்வேறு இடங்களில் விற்பவரையும் வாங்குபவரையும் பார்த்திருப்போம் ஆனால் பல விற்பவரும் வாங்குபவரும் சரியான அளவு லாபம் ஈட்ட முடியவில்லை. இதற்கான காரணம் விற்பவர் யார் வாங்குவார் என்பதை தேடிக் கொண்டோம் வாங்குபவர் எங்கு சரியான பொருள் கிடைக்கும் என்பதையும் தேடிக் கொண்டே இருப்பார்கள், எனவே விற்பவருக்கு சரியான அளவு வாங்குபவர் இல்லை என்பதனாலும் வாங்குபவர் சரியான விற்பவர் இல்லை என்பதனாலும் இந்த நிலை ஏற்படுகிறது. இதனை சரி செய்தே நீங்கள் நல்ல வருமானம் பெறலாம், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எங்கெங்கு பொருட்கள் நல்ல முறையில் எளிமையாகவும் மற்றும் மலிவாகவும் கிடைக்கிறது என்பதை சரியான அளவில் பட்டியல் செய்ய வேண்டும், பின்னர் இந்த பொருள் யார் யாருக்கு தேவைப்படுகிறது? எங்கு இந்த பொருளுக்கான தேவை அதிகம் இருக்கிறது என்பதையும் சரியான பட்டியல் செய்ய வேண்டும். இந்த நபர்களை இணைப்பதன் மூலம் விற்பவரிடமும் வாங்குபவர் இடமும் ஏதேனும் ஒரு தொகையை நீங்கள் வருமானமாக பெறுவீர்கள். இதற்கு நன்றாக விசாரிக்கும் திறமையும் பேச்சுத் திறமையும் இருந்தாலே போதும். 

Example: 

Old Items, Organic and Vegetables, Clothes... More. 


வங்கியில் வட்டிப் பெறுதல் ( Interest) 

உங்கள் பணத்தை பெருக்கமடைய செய்து அதில் இருந்து வருமானம் பெறுவதே இந்த வட்டி மூலம் பெறும் வருமானம் ஆகும். இதற்கு முதலில் உங்களிடம் ஏதேனும் ஒரு தொகை இருத்தல் வேண்டும் இந்த தொகையை எந்த இடத்தில் அதிக விகிதத்தில் வட்டி அளிப்பார்கள் என்ற வங்கியை தேர்வு செய்து அந்த வங்கியில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும், இந்தத் தொகைக்கேற்ற வட்டியினை உங்கள் கணக்கில் மாதம் தோறும் அல்லது ஆண்டுதோறும் வட்டி தொகை அளிக்கப்படுகிறது. இந்த முறையைப் பற்றி நன்றாக ஆய்வு செய்து இதில் முதலீடு செய்தும் நீங்கள் வருமானத்தை பெறலாம். இதில் உங்கள் பணம் உங்களுக்காக வேலை செய்யும் ஆனால் நீங்கள் அதிகப்படியான உழைப்பை செலவிட வேண்டிய அவசியம் இருக்காது. 


அப்லைட் மார்க்கெட்டிங்

அப்லைட் மார்க்கெட்டிங் என்பது பிறருடைய பொருளை விற்று தருவதன் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய கமிஷன் தொகை மூலம் வருமானம் பெறுவதாகும். இதற்கு முதலில் நீங்கள் சமுதாயத்தில் நல்ல பலம் வைத்திருக்க வேண்டும், நீங்கள் விற்கக்கூடிய பொருளை எத்தனை நபர்கள் வாங்குவார்கள் என்பதை அறிந்து அவர்களை அடையச் செய்தல் வேண்டும். இதுபோன்று ஆன்லைனில் விற்பனையாளர்களின் பொருளைப் பெற்று நீங்களே விற்று தருவதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்


இடத்தை வாடகைக்கு விடுதல்

உங்களுக்கு தேவைக்கு அதிகமாக இருக்கக்கூடிய இடத்தையோ அல்லது வீட்டு அறையையோ பிறருக்கு வாடகைக்கு அளிப்பதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். உங்களுக்கு சொந்த வீடு இருக்கும் பட்சத்தில் வீட்டில் பயன்படுத்தாத அறைகள் அதிகம் இருந்தால் அந்த அறைகளை பிறருக்கு வாடகை அளிக்கலாம் இதுபோல் பலரும் வாடகைக்கு வீடு எடுக்க தயாராக உள்ளனர், நீங்கள் இருக்கும் இடத்தை தகுந்து வாடகையை தீர்மானிக்கலாம் வாடகை வரக்கூடிய நபர்களிடம் சரியான முறையில் ஒப்பந்தம் பெற்று அவர்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று நல்ல வருமானம் அவர்களிடம் இருந்து மாதம் தோறும் வாடகை வருமானத்தை பெறலாம். 


வாகனங்களை வாடகைக்கு விடுதல்

உங்களிடம் இருக்கக்கூடிய வாகனங்களை பிறருக்கு வாடகை விடுவதாலும் வருமானம் பெற முடியும், உதாரணமாக உங்களிடம் கார் இருக்கிறது என்றால் அந்த காரை நீங்கள் அதிகம் பயன்படுத்தவில்லை என்றால் அது எவ்வித வருமானத்தையும் அளிக்காமல் அது அதன் இடத்திலேயே இருக்கும் ஆனால் மாறாக இதுபோன்று பிறருக்கு வாடகை அளிப்பதன் மூலம் அது தனி வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். 

இந்த பத்து வழிமுறைகளை சரியாக பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடிய தினசரி பணியில் பணி புரிந்து கொண்டே கூடுதல் வருமானத்தை பெறலாம்.  எனவே இந்த பத்து வழிமுறைகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும் என்று நம்புகிறேன் இதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்கு என்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்குவதன் மூலம் நீங்கள் கூடுதல் வருமானம் பெறலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்