10 Small Business Ideas 2024

10 small business ideas | 10 சிறு வணிக யோசனைகள்

10 Small Business Ideas 2024



இப்போது மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏதேனும் சுயதொழில் செய்யலாம் என்ற சிந்தனை பெருமளவு வளர்ந்துள்ளது, ஆனாலும் சுயதொழில் செய்வதற்கு பெரிய முதலீடு வேண்டும் என்ற காரணத்தினால் பலரும் சுயதொழில் செய்ய முன்வருவதில்லை, நான் பின்னர் கூறியுள்ள இந்த பத்து விதமான சிறு தொழில்களுக்கு முதலீடு மிகவும் குறைந்த அளவே தேவைப்படும் இதில் உங்களுக்கு ஏற்ப சுய தொழிலை தேர்ந்தெடுத்து நீங்களும் முதலாளியாக மாற முடியும்.

  1. Tea and coffee shop
  2. Ice cream shop
  3. Bakery shop
  4. Food business
  5. Photo studio
  6. Selling vegetables
  7. Delivery business
  8. Bike washing business
  9. Tuition classes
  10. Home decorator


Tea and coffee shop | தேநீர் மற்றும் காபி கடை

தற்போது உள்ள காலகட்டத்தில் டீ மற்றும் காபி என்பது மக்களிடையே பெரும் பங்கு வகிக்கிறது, இப்போது அதிகளவு மக்கள் டீ மற்றும் காபி பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இது வாழ்வின் முக்கிய அங்கமாகவே மாறி வருகிறது எனவே இந்த டீ மற்றும் காபி தொழில் செய்வதால் கூட நிச்சயம் உங்களுக்கு நல்ல வருமானம் உண்டு. இதற்கு முதலீடு என்பது மிகக் குறைவு டீ மற்றும் காபி வியாபாரம் செய்வதற்கு என்னென்ன தேவை என்பதை இப்பொழுது பார்க்கலாம், இந்த டீ வியாபாரத்தில் நீங்கள் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது நல்ல இடம், ஏனென்றால் இடம் தான் நாம் வியாபாரத்தை அதிகரிக்கும் எனவே எந்தெந்த இடத்தில் தனக்கு வியாபாரம் அதிகம் நடக்கும் என்பதை நிச்சயம் நீங்கள் அறிந்து அந்த மாதிரியான இடங்களைத் தேர்ந்தெடுத்து தொழிலை ஆரம்பிக்கலாம். இந்த தொழிலில் எரிபொருள் சிக்கனமே உங்கள் லாபத்தை அதிகரிக்கும், எனவே அதிகளவு எரிபொருளை செலவு செய்யாமல் மாறாக சூட்டைப் பாதுகாக்கும் பாத்திரங்களில் வைத்துக் கூட இந்த டீயை வியாபாரம் செய்யலாம். உங்களின் தேநீர் மற்றும் காபி சூடாகவும் சுவையாகவும் இருக்கும் பட்சத்தில் வருமானம் நிச்சயமாக பெருகிக் கொண்டே தான் இருக்கும்.


Ice cream shop | ஐஸ்கிரீம் ஷாப்

இதில் உங்கள் அதிகபட்ச முதலீடு இடம் மற்றும் குளிர்சாதன பெட்டி தான் இது மட்டும் உங்களுக்கு போதுமானதாக இருக்கும் ஏனென்றால் இதனை வைத்து நீங்கள் ஐஸ்கிரீம் ஷாப் தொழில் ஆரம்பித்து விடலாம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே ஐஸ்கிரீம்களை விரும்பி உண்பார்கள் குறிப்பாக வெயில் காலங்களில் ஐஸ்கிரீமின் தேவை சற்று அதிகமாகவே இருக்கும், இதுபோல கால நிலைக்கு தகுந்தார்போல் உங்கள் வியாபாரத்தையும் பெருக்கிக் கொள்ளலாம். தற்போது பல்வேறு வகையான ஐஸ்க்ரீம் உள்ளது இந்த ஐஸ்கிரீம்கள் அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, இதன் செய்முறைகளை youtube வீடியோக்களை பார்த்து கூட நீங்கள் கற்றுக் கொள்ளலாம், ஒரு சில ஐஸ்கிரீம் வகைகளை பிற நிறுவனங்களிடம் இருந்து பெற்று கூட நல்ல லாபம் வைத்து விற்கலாம்.பிற நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக வாங்கும் பட்சத்தில் உங்களின் லாப விகிதமும் அதிகமாகவே இருக்கும். இந்த தொழிலை சிறுவர்கள் கூடும் இடம் தியேட்டர் மற்றும் கடற்கரை பகுதிகளில் வைப்பதன் மூலம் அதிக வியாபாரத்தையும் அதற்கேற்ற லாபத்தையும் பெறலாம்.


Bakery shop | பேக்கரி கடை

இதுபோன்று பேக்கரிகளில் கேக், பிஸ்கட் மட்டும் இல்லாமல் காரம் மற்றும் இனிப்பு பொருட்களையும் வியாபாரம் செய்யலாம், இப்போது இந்த பேக்கரி தொழில் மூலம் குறைவான முதலீட்டில் பெரிய லாபம் பெறுவது எப்படி என்பதைப் பார்க்கலாம். முதலில் வியாபாரம் செய்வதற்கான நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் பின்னர் நன்றாக இயங்கி வரும் பேக்கரி ஏதேனும் ஒன்றை தொடர்பு கொண்டு அவர்களிடம் நீங்கள் வியாபாரம் செய்வதாக கூறி அவர்களிடம் பொருட்களை குறைவான விலையில் அல்லது சரியான விலையில் பொருட்களை வாங்கி நீங்கள் உங்கள் பகுதிக்கேற்ப விலையை நிர்ணயித்து வியாபாரம் செய்யலாம். உங்கள் வியாபாரத்தை பெருக்க டோர் டெலிவரி போன்ற பிற வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தும் பெரிய லாபத்தை பெறலாம். நீங்கள் வாங்கும் பேக்கரி கடைகளில் நல்ல விலையில் பொருட்கள் கிடைக்கும் போது நிச்சயம் நல்ல லாபத்தை பெறலாம்.


Food business | உணவு வியாபாரம் 

உணவு உற்பத்தியில் நல்ல சுவையான உணவும் விற்பனைக்கு ஏற்ற சரியான இடமும் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் உணவு வியாபாரம் என்பது வெற்றியை தரும். உணவு வியாபாரத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும் இடம் அதிகம் மக்கள் கூடும் இடமாகவும் மற்றும் அதிகம் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகள் இருக்கும் இடமாகவும் இருந்தால் சிறப்பாக இருக்கும். உங்கள் உணவின் சுவையிலும் தரத்திலும் அதிகம் கவனம் செலுத்தும் பொழுது வியாபாரத்தை வெகுவாக பெருக்கிக் கொள்ளலாம். உங்கள் வியாபாரத்தில் அதிக உணவு வகைகள் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை குறைவான உணவு வகைகள் இருந்தாலும் அதன் சுவையும் தரமும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நல்ல லாபம் பெறலாம். உணவுத் தொழிலில் நீங்கள் தேவைக்கேற்ப மட்டுமே உணவை உற்பத்தி செய்ய வேண்டும் மற்றும் அன்றாட நிகழ்வுகளை அதிகம் கருத்தில் கொள்ள வேண்டும், எந்தெந்த நாட்களில் வியாபாரம் அதிகம் செல்லும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப உணவை உற்பத்தி செய்ய வேண்டும் உற்பத்தி செய்த உணவு முழுமையாக விற்பனை செய்யாமல் மீறும் பட்சத்தில் அன்றைய லாபம் மிக குறைவாக தான் இருக்கும் எனவே தேவைக்கேற்ப உற்பத்தி செய்து நல்ல லாபத்தை பெறலாம்.


Photo studio | புகைப்பட ஸ்டுடியோ

இந்த ஸ்டூடியோ தொழில் ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் இடம் ஒரு கேமரா மற்றும் ஒரு கணினி. இதை பார்ப்பதற்கு சற்று பெரிய முதலீடாக தான் உங்களுக்கு தெரியும் ஆனால் இது நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த கேமரா மற்றும் கணினியை நீங்கள் பயன்படுத்தியதை பழைய விலையில் கூட முதலீட்டை சற்று குறைத்துக் கொள்ளலாம். இதற்கு உங்களுக்கு எடிட்டிங் திறமை தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது. இந்த போட்டோ ஸ்டூடியோ தொழிலில் குறைவான உழைப்பில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற சிறப்பான தொகையை பெற்று நல்ல லாபம் ஈட்டலாம்.


Selling vegetables | காய்கறி வியாபாரம்

காய்கறிகள் என்பது நம் உணவில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய ஒன்றாகும் எனவே இந்த காய்கறிகளின் தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. நீங்கள் விற்பனை செய்யும் காய்கறிகள் பசுமையாகவும் புதுமையாகவும் இருக்கும் பட்சத்தில் உங்கள் காய்கறிக்கு எப்போதும் மதிப்பு அதிகம். எனவே நீங்கள் வாங்கக்கூடிய இடங்களில் காய்கறிகள் எப்போதும் பசுமையாக இருக்குமாறு பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள் மற்றும் உங்கள் கடையில் காய்கறிகளை பாதுகாக்கவும் நல்ல பசுமையான காலநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் மட்டும் விற்பனை செய்யாமல் சில மண்டபங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற இடங்களில் ஆர்டர்களை பெற்று உங்கள் காய்கறிகளை வியாபாரம் செய்யலாம். இதுபோன்ற இடங்களுக்கு இலவச டோர் டெலிவரி வசதிகளை செய்யும் பட்சத்தில் அதிக ஆர்டர்களை பெற்று நல்ல லாபத்தை பெறலாம். காய்கறி வியாபாரத்தில் லாபத்தை பெருக்க சில காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்யலாம் அல்லது நேரடியாக உற்பத்தி செய்யும் இடத்தில் இருந்து வாங்கி விற்பனை செய்யலாம்.


Delivery business |டெலிவரி பிசினஸ்

டெலிவரி பிசினஸ் என்பது விற்பனையாளரையும் வாங்குபவரையும் ஒன்றிணைக்கும் தொழிலாகும்,தற்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொரு மக்களும் ஏதேனும் ஒரு குறிக்கோளுடன் ஓடிக்கொண்டே இருக்கின்றனர் எனவே அவர்களுக்கு சில பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் நேரடியாக மக்களை தொடர்பு கொள்ள இயலவில்லை இந்தப் பிரச்சனையை நீங்கள் சரி செய்வது தான் இந்த டெலிவரி பிசினஸ் இதில் எந்த இடத்தில் தேவை இருக்கிறது என்பதையும் எந்த இடத்தில் சரியான விலையில் விற்பனை செய்கிறார்கள் என்பதை அறிந்து  வாடிக்கையாளரிடம் பொருளை கொண்டு சேர்த்து இதற்கான கமிஷனை இருவரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். 
இதற்கான முதலீடு உங்களிடம் ஏதேனும் ஒரு வாகனம் இருத்தல் வேண்டும். மற்றும் எந்த இடத்தில் தேவை மற்றும் அளிப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதும் அவசியம். உங்கள் அறிவு திறனை சிறப்பாக பயன்படுத்தும் போது அதிக டெலிவரி ஆர்டர்களையும் மற்றும் நல்ல லாபத்தையும் பெறலாம்.

Bike washing business | பைக் கழுவும் தொழில்

இப்போது பைக் என்பது அனைவரிடத்திலும் அடிப்படைத் தேவையான ஒன்றாக உள்ளது எனவே இது போன்ற பைக்குகளை பல இடத்தின் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் . இதுபோன்று தொடர்ந்து வாகனங்களை பயன்படுத்தும் பொழுது அது மாசடைந்து அதன் நிறம் பொலிவற்றுப் போய் விடுகிறது இதனை சரி செய்வதற்கு பெரும்பாலான மக்கள் சொந்தமாக சுத்தம் செய்வதில்லை மாறாக இதுபோன்று பைக் கழுவும் இடத்தை அணுகுகின்றனர். பைக் சுத்தம் செய்யும் தொழில் ஆரம்பிப்பதற்கு நீங்கள் பெரும் அளவு முதலீடு செய்ய வேண்டாம். ஒரே ஒரு பைக் சுத்தம் செய்யும் கருவி வாங்கி கொண்டால் போதுமானது, இந்தக் கருவி அதிக வேகத்தில் தண்ணீரை செலுத்தி வாகனங்களை சுத்தம் செய்கிறது. இப்போது ஒரு பைக் சுத்தம் செய்வதற்கு 100 முதல் 200 ரூபாய் வரை பெறுகின்றனர். நூறு ரூபாய் நிர்ணயத்தால் கூட ஒரு நாளுக்கு பத்து வாகனம் என்றால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும், 400 ரூபாய் இதரசெலவுகளாக சென்றாலும் 600 ரூபாய் லாபமாக பெறலாம்.


Tuition classes | பயிற்சி வகுப்புகள்

உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதன் மூலம் கூட வருமானத்தை பெறலாம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்களையும் நாம்  எடுத்து பயிற்சி அளிக்கலாம் அல்லது நமக்குத் தெரிந்த ஏதேனும் கலையைக் கூட பிறருக்கு பயிற்சியாக அளித்து வருமானம் பெறலாம். உதாரணமாக வகுப்பு பாடப் பயிற்சி மற்றும் நடனம், பாடல்,  உடற்பயிற்சி, யோகா, போன்ற பல விஷயங்களை பிறருக்கு பயிற்சி அளிக்கலாம். இதில் நீங்கள் எவ்வளவு தெளிவாக ஒரு விஷயத்தை எடுத்துரைக்கிறீர்கள் என்றும் அவர்களின் புரிதல் திறனை எவ்வாறு புரிந்து செயல்படுகிறீர்கள் என்பதும் மிக முக்கியமாகும், இதுவே உங்கள் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருமானத்தை பெருக்கும்.


Home decorator | வீட்டு அலங்கரிப்பாளர்

தன் வீட்டை அழகாக காட்ட வேண்டும் என்பது பல்வேறு மக்களுடைய கருத்தாகும், ஆனால் இதுபோல் நம் வீட்டை எவ்வாறு அழகாக மாற்றுவது என்பதை பற்றிய எந்தவித யோசனையும் அவர்களுக்கு இருப்பதில்லை, இந்தப் பிரச்சினையை நீங்கள் சரி செய்து உங்களுக்கென்று ஒரு லாபத்தை பெறலாம். இதற்கு உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரு வீட்டை எவ்வாறு அழகு படுத்துவது மற்றும் எந்தெந்த இடத்தில் என்னென்ன பொருட்களை வைப்பது மற்றும் வீட்டிற்கு என்னென்ன வண்ணங்கள் பூசுவது போன்ற பல விஷயங்களை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும், இங்கு உங்களின் மூளையை உங்களின் முதலீடாக செயல்படும். இதற்கு ஆர்டர்களை பெறுவதற்கு முதலில் சில வீடுகளில் குறைவான விலையில் அலங்கரித்து அந்த வீட்டை நன்றாக புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த புகைப்படங்களை பிறரிடம் காட்டி அவர்களின் வீட்டு அழகை மேம்படுத்தி அதன் மூலம் அதிக ஆர்டர்களையும் மற்றும் அதிக லாபத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்