10 Steps to Reach Our Goal

10 Steps to Reach Our Goal | நம் இலக்கை அடைவதற்கான பத்து வழிமுறைகள்


10 steps to reach our goal


  • Wake up Early
  • Stay Consistent
  • Don't Be Lazy
  • Learn New Skills
  • Good Eating Habits
  • Stay Focus
  • Take Responsibility
  • Have Your Plan
  • Build Your Network
  • Learn From Your Failures

இந்தப் பதிவில் நாம் வாழ்வில் முன்னேறுவதற்கான 10 வழிமுறைகளை பற்றி கூறியுள்ளேன், பொதுவாக பலர் நம் வாழ்வில் ஏதேனும் ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவும் அல்லது ஏதேனும் ஒரு சாதனை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள் ஆனால் அதற்கான எந்தவித அடிகளையும் எடுத்து வைக்க மாட்டார்கள்!. 
இதுபோன்ற நபர்கள் இந்த பதிவில் கூறியுள்ள 10 விஷயங்களை தொடர்ந்து கடைபிடிக்கும் பொழுது அவர்கள் நினைத்த லட்சியத்தை நிச்சயமாக அடையலாம், இப்போது நம் வாழ்வில் முன்னேறுவதற்கான 10 வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம். 

அதிகாலை எழுந்திரு | Wake up Early

நம் வாழ்வில் முன்னேறுவதற்கான மிக அவசியமான ஒரு பழக்கம் இந்த அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கமாகும். வாழ்க்கையில் சாதித்த பலரும் இந்த அதிகாலை எழுந்திருக்கும் பழக்கத்தை பின்பற்றியுள்ளனர். 

இந்தப் பழக்கத்தை துவக்கத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது மிகவும் கடுமையான ஒன்றாக தான் இருக்கும் ஆனால் தொடர்ந்து அதிகாலையில் எழும் பொழுது அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும், இதுபோல் நாம் அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுது நமக்கு பொன்னான நேரம் கிடைக்கிறது.

இந்த நேரத்தில் நம்முடைய உடலும் மனமும் அமைதியாக இருக்கும் இந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், அதிகாலையில் எழுந்து நாம் படிக்க விரும்பினால் இது மிக சரியான நேரமாக இருக்கும் இந்நேரத்தில் நம் மனம் அமைதியாக இருப்பதனால் நான் படிக்கக்கூடிய விஷயம் முழுமையாக நம் மனதில் பதியும். 

இதுபோல் உடற்பயிற்சி செய்வது தியானம் மேற்கொள்வது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் ஏற்ற சரியான நேரமாக நம்முடைய காலைப் பொழுதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


தொடர்ந்து ஓடிக்கொண்டிரு! | Stay Consistent

உங்களுடைய இலக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நீங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நம் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த இலக்கை தடுப்பதற்கு என்று பல நபர்கள் நம் வாழ்வில் வரலாம், அல்லது அவர்கள் வாழ்க்கையில் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது வந்த தடைகளைப் பற்றியும் குறைகளைப் பற்றியும் கூறி உங்கள் கவனத்தை சிதறு செய்யலாம், அதற்குக் காரணம் அவர்கள் அவர்களுடைய இலக்கை சரியாக தீர்மானிக்கவில்லை என்பதும் அதற்கான முழு முயற்சியை செய்யவில்லை என்பதுமே ஆகும். 
இது போன்ற சொற்களைக் கேட்டும் அல்லது பிறர் கூறக்கூடிய குறைகளை கண்டும் உங்கள் இலக்கில் இருந்து நீங்கள் பின்வாங்கும் பொழுதே உங்கள் இலக்கை அடைவதற்கான சாத்தியத்தை இழந்து விடுகிறீர்கள். 
எனவே உங்கள் வாழ்வில் நீங்க எடுத்த முடிவை அடைய வேண்டும் என்றால் நிச்சயம் பிறர் கூறக்கூடிய எவ்வித கருத்துக்களையும் மனதில் எடுத்துக் கொள்ளாமல் நீங்கள் ஓடக்கூடிய பாதையில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
வாழ்வில் சாதித்த பலரும் தன் வாழ்க்கையில் பல குறைகளை கண்டவர்கள் தான், எனவே நம் குறிக்கோளை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது அதற்கு பல தடைகள் வந்தாலும் கூட நாம் சிறிதளவு கூட பின்வாங்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் எடுத்த முடிவில் தொடர்ந்து நம்மை ஈடுபடுத்திக் கொண்டே இருக்கும் பொழுது தான் அந்த முடிவை நாம் சரியாக அடைய முடியும் எனவே இந்த ஒரு பழக்கத்தை நம் வாழ்வில் நிச்சயமாக நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், இதுவே நம் வெற்றிக்கான முதல் படியாகும்.

சோம்பேறியாக இருக்காதே | Don't Be Lazy

நம் நினைத்த காரியத்தை அடைய விடாமல் செய்வதை இந்த சோம்பேறித்தனம் தான், நாம் எந்த விஷயத்தை செய்யும் பொழுதும் ஒரு சோம்பேறித்தனம் நம் கூடவே வந்து விடுகிறது.

நம்முடைய இலக்கினை எவ்வளவு உயரத்தில் வைத்துக் கொண்டாலும் அதற்கு சுறுசுறுப்பாக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் தான் அதனை அடைய முடியும் அதற்கு பதிலாக ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணி நேரத்தையும் நாம் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும் பொழுது நமக்கும் நம் இலக்கிற்குமான தூரம் நீண்டு கொண்டே செல்லும். எனவே ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணி நேரத்தையும் சோம்பேறித்தனம் அல்லாது சரியாக பயன்படுத்தும் பொழுதே நம் இலக்கை நாம் அடைய முடியும்.


புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள் | Learn New Skills

உலகில் பல முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன ஒவ்வொரு துறைகளிலும் பல புதிய சிந்தனைகள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கிறது இதுபோன்ற பல விஷயங்களை நாம் தெரிந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் இதுபோல் ஏற்படக்கூடிய ஒவ்வொரு புதிய விஷயங்களுக்கும் ஏற்ப நம் அறிவைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நாம் இதுபோல் புதிதாக தோன்றக்கூடிய பல திறன்களை வளர்த்துக் கொள்ளா விடில் நம் வாழ்வில் பின்னோக்கி சென்று விடுவோம் எனவே அன்றாடம் நம் உலகில் ஏற்படக்கூடிய புதிய புதிய சிந்தனைகளையும் புதிய புதிய திறன்களையும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

இதுபோல் நாம் புதிய பல திறன்களை வளர்த்துக் கொள்ளும் பொழுது நாம் வாழ்வில் முன்னேறுவதற்கான பல வழிகள் இதிலிருந்து தோன்றலாம். இந்தப் பழக்கம் நம் வாழ்க்கைக்கு பல புதிய வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவே இந்த கற்றுக் கொள்ளும் பழக்கத்தை நாம் தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


நல்ல உணவு பழக்கம் | Good Eating Habits

நம் உடல் நலத்தை கெடுக்கக்கூடிய பல உணவுப் பழக்கங்கள் இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது இதுபோன்ற தீய உணவுப் பழக்கங்களை விடுத்து நல்ல உணவு பழக்கங்களை நம் வாழ்வில் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும், நாம் தொடர்ந்து தீய உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பொழுது அது நம் வாழ்வையும் நம் உடலையும் மிக அதிகமாக பாதிக்கும். 

நம் வாழ்வில் சாதிப்பதற்கு மன ஆரோக்கியம் மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியமும் வேண்டும். எனவே நாம் அன்றாடம் வாழ்வில் சரியான அளவு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பொழுது நம் உடல் நிலையை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள முடியும். 

இதுபோல் நம்முடைய உடல்நிலை சரியாக இருக்கும் போது தான் மனமும் சரியாக செயல்படும் நம்முடைய மனம் சரியாக செயல்படும் பொழுது தான் நம் வாழ்வில் பல உயரங்களை அடைய முடியும். எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம்முடைய உணவு பழக்க வழக்கத்தின் மீது அதிகம் அக்கறை கொள்ள வேண்டும்.


அதிகம் கவனம் செலுத்துங்கள் | Stay Focus

நம் வாழ்வில் நடக்கக்கூடிய அத்தனை விஷயங்கள் மீதும் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும், நம் வாழ்வில் செய்யக்கூடிய காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என்பதை விட கவனமாக செய்து முடிக்க வேண்டும் என்பதே சிறப்பான ஒன்றாகும், நாம் செய்யக்கூடிய செயலில் கவனமாக செய்யும் பொழுது மட்டுமே நம் செயலில் ஏற்படக்கூடிய பிழைகளை மீண்டும் மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

எனவே நாம் எடுக்கக்கூடிய முடிவில் அதிகம் விழிப்புணர்வாகவும் மற்றும் இது சரியான பாதையில் செல்கிறதா என்பதை பற்றியும் அதிகம் கவனம் செலுத்தி ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டும். இதுபோல் நாம் வாழ்வில் எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடிகளையும் கவனமாக எடுத்து வைக்கும் பொழுது நம் வாழ்வில் பல பிழைகளை தவிர்த்து முன்னேற முடியும்.


பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் | Take Responsibility

நம் வாழ்வில் செய்யக்கூடிய ஒவ்வொரு பிழைகளுக்கும் நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் மாறாக பிறர் மீது குறைகளை சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது அந்தப் பிழையை நாம் கடைசி வரை உணரவே மாட்டோம்.

நம் ஒரு தவறை செய்து விட்டோம் என்றால் அந்த தவறை ஏற்றுக்கொண்டு அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும் மாறாக இந்த தவறிலிருந்து தப்பிக்க முயலும் பொழுது நாம் வேறு இடங்களிலும் இதே பிழையை செய்ய நேரிடும். எனவே நாம் செய்யக்கூடிய பிழைகளுக்கு நாமே பொறுப்பு ஏற்றுக்கொண்டு அதற்கான மாற்று வழிகளை செய்ய வேண்டும்.


உங்கள் திட்டத்தை வைத்திருங்கள் | Have Your Plan

நீங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான சிறப்பான திட்டங்களை வகுத்து வைத்துக் கொள்ளுங்கள், நம்முடைய வாழ்வில் நாம் என்னென்ன விஷயங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை விட எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதே முக்கியமாகும். எனவே நீங்கள் எடுத்த இழப்பிற்கான சரியான திட்டத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.

இதுபோல் உங்கள் இலக்கை அடைவதற்கான சரியான திட்டத்தை நீங்கள் தயார் செய்து கொள்ளும் பொழுது உங்கள் இலக்கை மிக வேகமாகவும் சரியாகவும் அடைய முடியும். எனவே இது போன்ற திட்டமிடும் திறனை வளர்த்துக் கொண்டு நீங்கள் எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடியையும் சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுவது மிக முக்கியமான ஒன்றாகும்.


பல முக்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் | Build Your Network

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ற ஒரு சமூக வட்டாரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் பல முக்கிய நபர்களையும் பிரபலங்களையும் அறிமுகம் செய்து அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

நீங்கள் இதுபோல பல நல்ல மனிதர்களை சந்தித்து அவர்கள் மூலம் உரையாடும் பொழுது அவர்கள் மூலமாக உங்களுக்கு பல முன்னேற்ற பாதைகள் கிடைக்கலாம், இதுபோல் நீங்கள் பல சாதனையாளர்களிடம் பேசும் பொழுது உங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது மட்டும் இல்லாமல் அவர்கள் சாதனைக்கான காரணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.இதுபோல் நீங்கள் வாழ்வில் முன்னேறுவதற்காக பல நல்ல மனிதர்களை அறிமுகம் செய்து கொள்வது மிக நல்லதாகும்.


உங்கள் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் | Learn From Your Failures

உங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு தோல்விகளில் இருந்தும் நீங்கள் ஒரு பாடத்தை கற்றுக் கொள்வீர்கள், எளிமையாக வெற்றி பெறுவது என்பது உங்களுடைய போட்டியாளர் வலிமையாக இல்லை என்பதையே குறிக்கிறது, இதுபோல் எளிமையாக கிடைக்கக்கூடிய வெற்றி எதுவும் நிரந்தரமாக இருப்பதில்லை. எனவே பல தோல்விகளை சந்தித்த பின்னர் கிடைக்கக்கூடிய வெற்றியே உங்கள் வாழ்வில் உண்மையான வெற்றியாகும்.

இதுபோல் பெரிய இலக்குகளை சாதிக்க நினைக்கும் பொழுது நீங்கள் பல தோல்விகளை சந்திக்கலாம் இதுபோன்று ஏற்படக்கூடிய தோல்விகளில் இருந்து பல நல்ல பாடங்களை கற்றுக் கொள்ளலாம், இதுபோன்று பல தோல்விகளை சந்திக்கும் பொழுது நீங்கள் என்னென்ன பிழைகளை செய்தீர்கள் என்று அனைத்தையும் அறிந்து அதனை சரிப்படுத்திக் கொள்ள முடியும். 

உங்கள் பிழையை கண்டறிவது மட்டும் இல்லாமல் அதை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் இந்த தோல்விகள் நமக்கு முக்கியமாக தேவைப்படுகிறது, எனவே இதுபோன்ற தோல்விகளில் இருந்து பல நல்ல பாடங்களை கற்றுக்கொண்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டே இருங்கள் அதுவே நிரந்தர வெற்றிக்கு வழியாக இருக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்