12 Must-Have Skills for Entrepreneurs | தொழிலதிபர்களுக்கு கட்டாயம் தேவையான 12 திறன்கள்
- Time management
- Communication skill
- Data Analytics
- Creative Thinking
- Branding
- Social Skill
- Budget handling
- Business management
- Leadership
- Public speaking skill
- Marketing skill
- Human psychology
இந்தப் பதிவில் நாம் ஒரு சிறந்த தொழிலதிபர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டிய 12 திறமைகளை பற்றி தான் அறிந்து கொள்ளப் போகிறோம்.
இந்த 12 திறன்களையும் திறன் பட கற்றுத் தேர்ந்து விட்டால் ஒரு தொழிலில் நாம் நிச்சயமாக வெற்றி அடையலாம். இப்போது தொழிலதிபர்களுக்கு தேவையான 12 முக்கிய திறன்களை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
Time management | நேர மேலாண்மை
நாம் ஒரு தொழிலதிபராக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நேர மேலாண்மையை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நேரத்தை எவ்வாறு முறையாக கையாளுவது என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல நேரத்தை சிறப்பான வழியில் செலவிட வேண்டும்.
நம் இலக்கை சரியான நேரத்தில் அடைவதும் கிடைத்த நேரத்தை முறையாக பயன்படுத்துவதும் நேர மேலாண்மையில் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே நேரத்தை கையாளும் திறன் என்பது ஒரு தொழிலதிபருக்கு நிச்சயம் தேவையான அடிப்படை திறனாகும்.
Communication skill | தொடர்பு திறன்
நம்முடைய தொடர்பு திறன் சரியாக இருந்தால் மட்டுமே நாம் கூற வரும் கருத்துக்களை சிறப்பான முறையில் வாடிக்கையாளரிடமும் நம்மிடம் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களிடமும் எடுத்துரைக்க முடியும்.
இந்த தொடர்புத் திறனை சிறப்பாக கையாளும் பட்சத்தில் நம்மிடம் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் எதற்காக வேலை செய்ய வேண்டும் என்பதை அறிந்து நம் இலக்கை அடைய பெருமளவு உதவி செய்வார்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் உதவும்.
ஒரு தொழிலதிபராக உங்களை சுற்றி இருக்கக்கூடிய அத்தனை நபர்களிடமும் சரியான முறையில் தொடர்பை மமேற்கொள்ள வேண்டும், இதுவே உங்கள் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பெருமளவு உதவியாக இருக்கும்.
Data Analytics | தரவு பகுப்பாய்வு
நம் நிறுவனத்தின் முறையான செயல்பாட்டிற்கு தரவு பகுப்பாய்வு என்பது மிகவும் உதவியாக இருக்கிறது. முதலில் இந்த தரவு பகுப்பாய்வு என்றால் என்ன என்பதை பார்க்கலாம் இந்த தரவு பகுப்பாய்வு என்பது நம்மை சுற்றி நடக்கக்கூடிய அன்றாட நிகழ்வுகளில் தேவையானவற்றை முறையாக பதிவு செய்து வைத்துக் கொள்வது ஆகும்.
இது நம் நிறுவனம் எவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கிறது எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்க மிகவும் எளிமையாக இருக்கும்.
இதில் குறிப்பாக நம் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடு, பிற நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கிறது மற்றும் வாடிக்கையாளர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை எல்லாம் நாம் முதலில் பதிவு செய்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல நம் தினசரி செயல்முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த தரவு பகுப்பாய்வு திறன் என்பது நம் இலக்கை எளிமையாக அடைய உதவி செய்கிறது.
Creative Thinking | புதுமைகளை சிந்தித்தல்
அனைத்து விதமான தொழில்களிலும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல தினசரி பல மாற்றங்களை நடந்து கொண்டே இருக்கிறது, இதற்கு ஏற்றார் போல நாமும் பல புதிய சிந்தனைகளை சிந்தித்து மக்கள் விரும்பத் திற்கு ஏற்றார் போல நமது தொழிலை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறந்த தொழிலதிபர் என்பவர் தனக்கு நிலையான வருமானம் வேண்டும் என்பதை மட்டும் விரும்ப மாட்டார், நம் தொழிலின் வளர்ச்சி என்றும் கீழ்நோக்கி சென்று விடக்கூடாது என்பதையும் தன் தொழிலை மேலோங்கி வளர்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை தான் விரும்புவார் அதற்கு ஏற்றார் போல பல புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார், இதற்கு அவர்களின் தொலைநோக்குப் பார்வையும் புதுமைகளை சந்திக்கும் திறமையும் தான் காரணமாக அமைகிறது.
இந்த புதுமைகளை சிந்திக்கும் திறமை என்பது பிற போட்டியாளர்களினால் நாம் நிறுவனம் வீழ்ச்சி அடையாமல் மேலோங்கி வளர உதவி செய்கிறது.
Social Skill | சமூக திறன்
ஒரு தொழிலதிபராக நம்முடைய சமூகப்பார்வை மேலோங்கி இருத்தல் அவசியமாகும், நாம் இந்த சமுதாயத்தையும் சமுதாய நபர்களையும் எவ்வாறு பார்க்கிறோம் மற்றும் எவ்வாறு கையாளுகிறோம் என்பது மிக அவசியமான திறமையாகும்.
சமுதாயத்தினரிடம் இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் நாம் நன்கு ஆலோசனை செய்த தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும், எந்த விதத்திலும் நம் நிறுவனத்தைப் பற்றிய தவறான சிந்தனைகளை மக்களுக்கு விதைத்து விடக்கூடாது, பின்னர் இந்த சமுதாயத்தினரிடம் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாடிக்கையாளர்களின் வளர்ச்சியும் உங்கள் தொழில் வளர்ச்சியும் இருக்கும்.
Branding | பிராண்டிங்
ஒரு தொழிலதிபராக பிராண்டிங் பற்றிய சிந்தனை நமக்கு அதிக அளவு இருக்க வேண்டும், ஏன் இந்த பிராண்டிங்கில் இவ்வளவு முக்கியத்துவம் என்றால் நம் தொழிலில் ஏற்படக்கூடிய நற்பெயர் தீய பெயர் என்ற எல்லாமே இந்த பிராண்டிங்கையே சாறும், நீங்கள் ஒரு சிறப்பான தொழிலாக வளர்ந்து நீங்கள் ஒரு தொழிலை எவ்வளவு திறம்பட செய்தாலும் மக்கள் பார்வையில் உங்களை நிறுவனமாக பார்க்க மாட்டார்கள் மாறாக உங்களை ஒரு பிராண்டாக மட்டுமே கருத்தில் கொள்வார்கள், எனவே இந்த பிராண்டை பற்றிய மக்கள் சிந்தனையை வளப்படுத்துவதே இந்த பிராண்டிங் திறமையாகும்.
உங்கள் நிறுவனத்தின் பிராண்ட் நற்பெயரை அதிகரிக்க நீங்கள் பல விஷயங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும், இதுவே நாளடைவில் உங்கள் பிராண்டை முன்னணியில் நிறுத்தச் செய்யும், எனவே பிராண்டை வளர்ப்பதற்கான திறமை ஒவ்வொரு தொழிலதிபருக்கும் மிக அவசியமான ஒன்றாகும்.
Budget handling | பட்ஜெட் கையாளுதல்
நிதி நிலையை சரியாக கையாள்வது உங்கள் அடிப்படை திறமையாகும். உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தல், கொள்முதல் செய்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், என்று பல வகையில்பிரித்திருக்கலாம் ஆனால் இதில் எந்தெந்த பகுதியில் நீங்கள் எவ்வளவு தொகையினை ஒதுக்க வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம், உதாரணமாக உங்கள் பொருளை விற்பனை செய்யும் விலையை விட உற்பத்தி செய்வதற்கும் மற்றும் அதை விளம்பர செய்வதற்கும் அதிக அளவு செலவு செய்தால் உங்களுக்கு நஷ்டத்தையே அளிக்கும் இதுபோல் நீங்கள் எந்தெந்த பகுதியில் எவ்வளவு தொகை செலுத்தி உங்கள் வருமானத்தை பெருக்கலாம் என்பதை பற்றி நன்கு ஆலோசனை செய்தல் வேண்டும்.
இந்த நிதி நிலையை சரியாக கையாளவில்லை என்றால் உங்கள் நிறுவனம் தொடர் நஷ்டத்தை அடையலாம் இது போன்று நஷ்டத்தை அடையும் பொழுது முதலீடு செய்ய போதுமான தொகை இல்லாமல் உங்கள் நிறுவனம் முன்னேற்ற பாதையில் செல்லாமல் வீழ்ச்சி அடைந்து விடும். எனவே இந்த நிதி நிலையை சரியாக கையாளும் திறமையை முன்கூட்டியே வளர்த்துக் கொள்வது அவசியமாகும்.
Business management | வணிக மேலாண்மை
தொழில் என்பது பல இடர்பாடுகளை சந்திக்கக்கூடிய களமாகும், தொழில் என்பது நமக்கு எப்போதும் நிலையான வருமானத்தை அளிக்கும் என்று நம்ப இயலாது.
எனவே நமக்கு இக்கட்டான சூழ்நிலைகள் வரும் பொழுதும் நாம் கொஞ்சமும் மனம் தளராமல் அதனை சந்திக்க வேண்டும், நமக்கு தொழிலில் வரக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைகளையும் சரியாக கையாண்டு அதனை நமக்கு லாபகரமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
நமக்கு தொழில் வரக்கூடிய எல்லா பிரச்சனைகளையும் சரியாக மேலாண்மை செய்யும் தகுதியை நாம் அடைய வேண்டும், இதுவே தொழிலதிபர்களின் மிகச்சிறந்த அடிப்படை திறமையாகும். உங்கள் மேலாண்மை திறனை பொறுத்தே உங்கள் நிறுவனம் வளர்வதும் வீழ்ச்சி அடைவதும் நடைபெறும், எனவே நிறுவனத்தை சரியாக மேலாண்மை செய்யும் திறமையை நிச்சயம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
Leadership | தலைமை
அனைத்து தொழிலதிபர்களுக்கும் தன் தொழிலை பெருக்குவதற்கு நிச்சயம் இருக்க வேண்டிய அடிப்படையான ஒன்று இந்த தலைமை பண்பு, முதலில் ஓர் நிறுவனத்தை நடத்தக்கூடிய தகுதியினை நம் பெறுதல் வேண்டும், நிறுவனத்தில் நம்மை சுற்றி நடக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் நம்மை முன்னுதாரணமாக வைத்தே நடைபெறும்.
எனவே அதற்கு ஏற்றார் போல நாம் முன்னுதாரணமாக திகழ வேண்டும். உங்கள் தொழிலுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைகளையும் நீங்களே முன் நின்று சரி செய்து அதனை மேம்படுத்தி வழி நடத்த வேண்டும்,
உங்கள் தலைமை பண்பு சரியாக இல்லாவிடில் உங்கள் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய அத்தனை பணியாளர்களும் பொறுப்பற்று செயல்படுவார்கள் இது நிறுவனத்தை வெகுவாக பாதிக்கும், எனவே சிறப்பான தலைமை பண்பை வளர்த்துக் கொள்வது நாம் நிறுவனத்திற்கு மிக அவசியமான திறனாகும்.
Public speaking skill| பொது பேச்சு திறன்
நாம் ஒரு தொழிலதிபராக இருக்கும் பட்சத்தில் நம்மிடம் பலர் பல கருத்துக்களையும் கேள்விகளையும் முன் வைப்பர் இதற்கு ஏற்றவாறு சரியான ஒப்புதலையும் விடையையும் அளிக்க வேண்டி வரும் எனவே இந்த பொது இடத்தில் பேசக்கூடிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நம் வாடிக்கையாளர்களுக்கு தோன்றக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியது உங்கள் தகுதி வாய்ந்த பேச்சாக இருக்க வேண்டும் எனவே உங்கள் பேச்சில் ஆழ்ந்த கருத்தும் தெளிவான உச்சரித்தலும் இருத்தல் வேண்டும். பொதுமக்கள் என்றும் தெளிவான பதிலையே எதிர்பார்ப்பார்கள் எனவே பொது இடங்களில் பேசும் பொழுது நம் வார்த்தையின் மீது அதிகம் கவனம் செலுத்தி பேசுதல் வேண்டும்.
இந்த பொது இடத்தில் திறமையாகவும் தெளிவாகவும் பேசக்கூடிய திறன் என்பது ஒவ்வொரு தொழிலதிபர்களுக்கும் அவசியமான திறனாகும்.
Marketing skill | சந்தைப்படுத்துதல் திறன்
நீங்கள் எது பற்றிய நிறுவனம் ஆரம்பித்தாலும் உங்களின் சேவை அல்லது பொருட்களை மக்களிடம் சந்தைப்படுத்தும் திறன் என்பது நிச்சயம் அவசியமாக தேவைப்படும் ஒன்றாகும். உங்கள் பொருள் அல்லது சேவை எதைப் பற்றியது அதன் பயன்பாடு என்ன என்பதை எல்லாம் மக்களுக்கு போதுமானவரை எடுத்துரைத்து அந்த பொருட்களை சரியாக மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே இந்த சந்தைப்படுத்தலாகும்.
உங்களுடைய உற்பத்தித்திறன் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அந்த உற்பத்தி திறனை தீர்மானிப்பது இந்த சந்தைப்படுத்தலும் விற்பனை செய்தலும் தான் உங்கள் பொருள் தொடர்ந்து விற்பனையாகிக் கொண்டிருந்தால் மட்டுமே நீங்கள் பொருட்களை தொடர்ந்து உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் வருமானத்தை பெருக்க முடியும்.
எனவே உங்களின் பொருள் அல்லது சேவை எந்த இடத்தில் அதிகம் அவசியப்படுகிறது என்பதை அறிந்து அவர்களிடம் சரியான முறையில் எடுத்துரைத்து அதனை சந்தைப்படுத்தும் திறன் என்பது ஒரு தொழில் அதிபருக்கு மிக முக்கியமான அடிப்படை தகுதியாகும்.
Human psychology | மனித உளவியல்
ஓர் சிறந்த தொழிலதிபராக உங்கள் தொழிலின் வளர்ச்சிக்கு சற்று மனித உளவியல் பற்றியும் தெரிந்துக் கொள்வதும் அவசியமாக உள்ளது. இதுவே மாறக்கூடிய கால நிலைக்கு ஏற்றார் போல மக்கள் மனநிலையை முன்னதாகவே அறிந்து அதற்கு ஏற்றார் போல நம் தொழிலின் வளர்ச்சியை பெருக்கிக் கொள்ள முடியும்.
வரக்கூடிய காலங்களில் மக்களின் விருப்பம் எப்படி மாறவிருக்கும் என்பதை பற்றியும் நம் முன்னதாக தெரிந்து கொள்ளவும் இந்த மனித உலவியில் என்பது நமக்கு தேவைப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் நீங்கள் வழங்கக்கூடிய சேவை அல்லது பொருள் எது போன்று இருந்தால் மக்கள் அதிகம் விரும்புவார்கள் என்பதை அறிவதற்கும் இது தேவைப்படுகிறது.
இந்த 12 திறன்களும் ஓர் சிறந்த தொழிலதிபர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களாகும். இந்த 12 திறமைகளை உடைய தொழிலதிபர்கள் தன் தொழிலில் சிறப்பான வெற்றியடையலாம்.

0 கருத்துகள்