6 Ways to Improve Your Discipline | உங்கள் ஒழுக்கத்தை மேம்படுத்த 6 வழிகள்
- Wake up early
- Take cold shower
- Improve positive habits
- Stop bad habits for life
- Think about your goals
- Stay consistent
Wake up early | சீக்கிரம் எழுந்திரு
அதிகாலையில் எழுவது நம் வாழ்க்கைக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கக்கூடிய ஒன்றாகும், பல வெற்றியாளர்கள் அதிகாலை எழுவதினை தன் தினசரி பழக்கமாக வைத்துள்ளனர் மற்றும் இந்த பழக்கத்தை பிறருக்கும் பின்பற்ற அறிவுறுத்தி வருகின்றனர். நாம் தினசரி அதிகாலையில் எழுவதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.
- Boost your Mood | மனதிற்கு புத்துணர்ச்சி
முதலில் நம் மனதிற்கு புத்துணர்ச்சி மற்றும் உத்வேகம் கிடைக்கிறது. ஆரம்பத்தில் அதிகாலையில் எழுவது மிக கடினமான ஒன்றாக தான் தெரியும் ஆனால் இதை தொடர் பழக்கமாக வைத்துக் கொள்ளும் பொழுது நம் மீதான நம்பிக்கை அதிகரித்து நாம் எதையும் சாதிக்கலாம் என்ற நேர்மறை சிந்தனை நமக்குள் அதிகரிக்கும்.
- Creative Thinking | படைப்பு சிந்தனை
அதிகாலையில் நமது மனம் மிகவும் அமைதியான நிலையில் இருப்பதன் காரணமாக பல புதிய சிந்தனைகள் தோன்றும் இது நமது பல குழப்பங்களுக்கும் தீர்வாகவும் அமையும். இதுபோல் பல புதிய சிந்தனைகள் தோன்றுவதன் காரணமாக பல இக்கட்டான சூழ்நிலையிலும் தெளிவான முடிவுகளை எடுக்கச் மனம் உதவியாக இருக்கும்.
- Valuable time | மதிப்புமிக்க நேரம்
காலையில் சீக்கிரம் எழும்பொழுது மதிப்பு வாய்ந்த கூடுதல் நேரம் கிடைப்பதனால் உடற்பயிற்சி மூச்சுப் பயிற்சி போன்றவை மேற்கொண்டு உடல் நலத்தை மேம்படுத்தும் வகையில் நேரத்தை செலவழிக்கலாம்.
அதிகாலையில் எழுந்து முன்னதாகவே நம் பணியை தொடர்வதன் காரணமாக நமக்கு வேலை செய்ய அதிக நேரம் கிடைக்கிறது இதனால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் குறைந்து நல்ல தூக்கத்திற்கும் உதவி செய்கிறது.
Take cold shower | குளிர்ந்த நீரில் குளித்தல்
நாம் அன்றாடம் குளிர்ந்த நீரில் குளிப்பது நம் உடலுக்கு பல நன்மை பயக்கும் விஷயங்களை அளிக்க வல்லதாக உள்ளது.
- Improve your immunity power | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
குறிப்பாக நாம் தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பது நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலை பாதுகாக்கிறது.
இது நம் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது மேலும் நம் உடற்பயிற்சி செய்யும் பொழுது ஏற்படக்கூடிய உடல் வலிகளை குறைத்து தசை செயல்பாட்டை சரி செய்கிறது.
நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் இது பெரும் பங்காற்றுகிறது.
Improve positive habits | நேர்மறை பழக்கங்களை மேம்படுத்தவும்
நம் மனதிற்கு பிடித்த பல நேர்மறையான பழக்க வழக்கங்களை அதிகம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுபோல் நம் வாழ்வில் பல நேர்மறை விஷயங்களை அதிகரிக்க அதிகரிக்க, நம் வாழ்க்கை பல நேர்மறை விஷயங்களை செய்ய வல்லதாக மாறிவிடும்.
- Sun light & walking | சூரிய ஒளி & நடைபயிற்சி
உதாரணமாக சூரிய வெளிச்சத்தில் நடைபயிற்சி செய்வது, சூரிய வெளிச்சம் நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது குறிப்பாக வைட்டமின் டி சக்தியை நம் உடலுக்கு அளிக்கிறது மற்றும் தொடர்ந்து நடைபயிற்சி செய்வது நம் உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை குறைத்து நம்மை ஆரோக்கியமாக வாழ பல வகையில் உதவி செய்கிறது.
- Praying | பிரார்த்தனை
நாம் தொடர்ந்து இறை வழிபாட்டில் ஈடுபடும் பொழுது நாம் தீய சிந்தனைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் நேர்மறையான சிந்தனைகளை அதிகரித்து நேர்மறையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்கிறது. இது நம் மனதிற்கு ஓர் முழு நிறைவை அளிக்க வல்லதாக உள்ளது.
- Healthy food habits | ஆரோக்கியமான உணவு பழக்கம்
நல்ல உணவு பழக்க வழக்கம் என்பது நம் உடல் ஆரோக்கியத்துக்கு பெருமளவு பங்காற்றுகிறது ஏனென்றால் நாம் சரியான உணவை சரியான முறையில் உண்ணும் பொழுது பல நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
Stop bad habits for life | வாழ்க்கைக்கு தீங்கிழைக்கும் பழக்கங்களை நிறுத்துங்கள்
பல விஷயங்கள் நம் வாழ்க்கைக்கு கெடுதல் என்று தெரிந்தும் நாம் தொடர்ந்து அதனை செய்து கொண்டே இருக்கிறோம். இதுபோன்ற சில தீய பழக்க வழக்கங்களை நாம் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் பொழுது நம் லட்சியத்தை அடைவது மிக கடினமாகவும் அல்லது அடைய முடியாமலும் போய்விடுகிறது.
இந்த சில தீய பழக்கவழக்கங்கள் நம் முன்னேற்றத்தை ஏதோ ஒரு வகையில் தடுத்துக் கொண்டே இருக்கும் எனவே என்னென்ன தீய பழக்கங்கள் நம் முன்னேற்றத்தை தடுக்கின்றது என்பதனையும் நாம் என்ன தீய பழக்கங்களை கைவிட வேண்டும் என்பதை பற்றியும் இப்பொழுது தெளிவாக பார்க்கலாம்.
- Not sleeping for a long time | நெடுநேரம் தூங்காமல் இருத்தல்
அதிக நேரம் தூங்காமல் கண் விழித்திருப்பது நமக்கு மிகவும் தீங்கழிக்க கூடிய ஒரு பழக்கமாகும் இது நமது உடல் நலத்தையும் வெகுவாக பாதிக்க கூடும். எனவே அதிகபட்சமாக 9 முதல் 10 மணிக்குள் தூங்க சென்று விட வேண்டும்.
இது உடல் நலத்தை பாதிப்பதோடு அதிகாலையில் எழ இயலாமல் சோர்வை அளித்து நம் நாளை சீரழிக்கிறது.
- Useless phone usage | பயனற்ற தொலைபேசி பயன்பாடு
நாம் பொழுதுபோக்கிற்காக அதிக நேரம் தேவையற்ற வகையில் மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது நம் வாழ்வில் பல முக்கிய விஷயங்களை நம் சோம்பேறித்தனத்தின் காரணமாக கைவிட்டு விடுகிறோம்.
ஒரு நாளைக்கு அதிக நேரம் மொபைல் ஃபோன்களை பார்ப்பதிலேயே நேரம் கழிவதனால் சரியான விதத்தில் நம் நேரத்தை செலவிட இயலாமல் பல நல்ல விஷயங்களை செய்ய இயலாமல் போய்விடும். இதுபோல் பல பொழுதுபோக்கு வீடியோக்களை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நம் குறிக்கோளை மறக்கச் செய்து நம்மை மூழ்கடித்து விடுகிறது, இது நம் வாழ்வின் வளர்ச்சிக்கு பெருமளவு பாதிப்பு அளிக்கிறது.
- Bad food Habits | கெட்ட உணவுப் பழக்கம்
தீங்கு விளைவிக்கும் உணவுகளை உன்பதும் நம் வாழ்க்கைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும், சுவை காரணமாக பல நொறுக்குத் தீனீக்களையும் மற்றும் தவறான உணவு பழக்க வழக்கங்களையும் மேற்கொள்வது நம் வாழ்க்கைக்கும் உடலுக்கும் பல உபாதைகளை அளிக்க வல்லதாக உள்ளது.
இது தேவையற்ற உடல் பருமன் மற்றும் உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கிறது. இது நம் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கச் செய்து நாம் சிந்தனையையும் சிறப்பாக செயல்பட இயலாத நிலைக்கு தள்ளி விடுகிறது. எனவே இது போன்ற தீய பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ்வது நம் வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு பெரும் பங்காற்றுகிறது.
Think about your goals | உங்கள் இலக்குகளைப் பற்றி சிந்தியுங்கள்.
உங்கள் இலக்குகளை பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பதே உங்கள் இலக்கை மிக வேகமாகவும் திறமையாகவும் அடையச் செய்யும், இதற்கு முதலில் நமக்கென்று ஒரு இலக்கையும் மற்றும் அந்த இலக்கைப் பற்றிய சரியான தெளிவுடனும் இருத்தல் வேண்டும்.
உங்கள் இலக்கை அடைவதற்கு சரியான திட்டத்தை தயார் செய்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் குறிக்கோளை அடைவதற்கு நீங்கள் தினசரி என்னென்ன விஷயங்களை கையாள வேண்டும் மற்றும் எந்தெந்த விஷயங்களை செயல்படுத்த வேண்டும் என்பதனையும் அறிந்து தினசரி வாழ்க்கையில் செயல்முறைப்படுத்தி வாருங்கள் இது உங்கள் குறிக்கோளை அடைய பெருமளவு உதவி செய்யும்.
- Imagine your Achievement | உங்கள் சாதனையை கற்பனை செய்து பாருங்கள்
உங்கள் குறிக்கோளை நீங்கள் அடைந்த பின் எவ்வாறு உணர்வீர்கள் என்பதை இப்பொழுது கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் கற்பனை திறனை இதில் பலப்படுத்த பலப்படுத்த இந்த கற்பனை திறன் உங்கள் குறிக்கோள் மீதான ஆர்வத்தை அதிகரித்து குறிக்கோளை அடைய மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகளை தோய்வின்றி சுறுசுறுப்பாக செய்ய உதவியாக இருக்கும்.
இது போல் கற்பனை செய்து பார்ப்பதனால் நம் குறிக்கோள் மீதான நம்பிக்கையை அதிகரித்து குறிக்கோளின் வெற்றிக்கு தயாராக நம் மனதை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்.
Stay consistent |நிலையாக இருங்கள்
நம் குறிக்கோளில் நிலைத்திருப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும். நம் குறிக்கோளை விடுத்து ஒரு துளியும் கவனிச்சுதறல் ஏற்படக்கூடாது ஏனென்றால் இதுபோன்ற கவனச்சிதறல் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருந்தால் நம் குறிக்கோளை அடைவது மிக கடினமான விஷயமாக மாறிவிடும்.
நம் குறிக்கோளை அடைவதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்பதைத் தாண்டி நாம் தினமும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே மிக முக்கியமான ஒன்றாகும். நாம் எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து சரியான முறையில் செய்து கொண்டே இருத்தல் தான் நம் ஒழுக்கத்தை பலப்படுத்தி செல்லும்.
- Motivate your self | உங்களை ஊக்குவிக்கவும்
நம்மை ஊக்குவித்துக் கொண்டே இருத்தல் மிக அவசியமாகும் நமக்கு சரியான அளவு ஊக்கம் இல்லை என்றால் ஒரு செயலை செய்வது மிக கடினமாக இருக்கும், எனவே ஊக்கமூட்டும் வகையில் பல விஷயங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக உங்களை ஊக்குவிக்கும் வகையில் பல வீடியோக்கள் பார்ப்பது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம், இதுபோல் நம்மை ஊக்கமாக வைத்துக் கொள்வது நம் குறிக்கோளை விட்டு பின்வாங்குவதை தடுத்து முன்னேறி செல்ல பெருமளவு உதவி செய்கிறது.
- practice | பயிற்சி
உங்கள் குறிக்கோளை அடைவதற்கு பலமுறை பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் பயிற்சி என்பது பல வெற்றியாளர்களுக்கு இன்றியமையாத சக்தியாக இருந்துள்ளது.
உங்கள் பயிற்சியை மட்டும் நீங்கள் ஒருபொழுதும் விட்டுவிடக்கூடாது நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு இருப்பது தான் உங்கள் குறிக்கோளை ஒரு நாள் நிஜமாக்கி கொடுக்கும். எனவே உங்கள் குறிக்கோளை அடையும் வரையில் நீங்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருத்தல் வேண்டும்
- Remove negativity people | எதிர்மறை நபர்களை அகற்றவும்
உங்களை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆட்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வையுங்கள், ஏனென்றால் நீங்கள் உங்கள் குறிக்கோளை அடைய எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளையும் அவர்கள் விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள்.இந்த விமர்சனக்கு நாம் ஒருபொழுதும் செவி சாய்க்கவில்லை என்றாலும் கூட நம் உத்வேகத்தை அவர்கள் வெகுவாக குறைக்கும் சிந்தனையை அதிகம் செலுத்திக் கொண்டே இருப்பார்கள்.
இது போன்ற ஆட்களிடம் சற்று தள்ளி இருப்பது நமக்கு மிகவும் நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும். இதே போல் உங்கள் குறிக்கோளை பற்றிய கருத்துக்களையும் அடுத்து நீங்கள் செய்ய இருக்கும் விஷயங்களையும் இதுபோன்ற எதிர்மறை ஆட்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே மிக சிறப்பாகும்.
இந்த ஆறு விஷயங்களை உங்கள் வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்ளும் பொழுது நிச்சயமாக நீங்கள் ஒழுக்கமாகவும் மற்றும் சிறந்த வெற்றியாளராகவும் வாழ முடியும்.

0 கருத்துகள்