9 Habits of Rich People | பணக்காரர்களின் 9 பழக்கங்கள்
- Read Life improvement books
- Multiple Source of Income
- Manage Money Correctly
- Budget Handling
- Avoid Debt
- Set a Daily Goal
- Don't Pretend to be Rich
- Build Your Business
- Time Management
நாம் செய்யக்கூடிய செயலை எப்படி சரியாக செய்ய வேண்டும் என்பதை தெரியாத பலரும் நாம் செய்வதை சரி என்று நினைத்தே பலகாலம் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள் ஆனால் அவர்கள் நல்லது என்று நினைத்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கக் கூடிய விஷயம் அவர்களுக்கு பிற்காலத்தில் எந்தவித பயனையும் அளித்திருக்காது, அப்போதுதான் அவர்களுக்கு நாம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை புரியவரும்.
இதற்கு இடையில் பல ஆண்டுகளை நாம் கடந்திருப்போம், எனவே நாம் எது போன்ற வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டால் செல்வந்தர் நிலையை அடையலாம் என்பதற்கு இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இப்போது செல்வந்தர்களுக்குறிய 9 பழக்கங்களை பார்க்கலாம் இந்த ஒன்பது பழக்கங்களையும் நாமும் நம்முடைய வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது நாமும் மிக விரைவில் செல்வந்தராக மாறக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
இந்த ஒன்பது பழக்கங்களையும் நம்முடைய வாழ்வில் ஒரு நாள் அல்லது இரு நாள் மட்டும் கடைபிடிக்காமல் தொடர்ந்து நம்முடைய வாழ்நாள் பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும், மற்றும் இந்த பதிவில் கூறக்கூடிய சில செயல்முறைகளையும் நம் வாழ்வில் பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் நாமும் இது போன்ற செல்வந்தர் நிலையை அடையலாம்.
முன்னேற்ற புத்தகங்களை வாசிப்பது | Read Life improvement books
நம் வாழ்வில் நிச்சயமாக கற்கும் அல்லது வாசிக்கும் திறனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், உலகில் மாறக்கூடிய பல்வேறு விஷயங்களுக்கு ஏற்ப நம்மையும் நம் வாழ்க்கையையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் இதற்கு உலகில் தோன்றக்கூடிய புது புது விஷயங்களையும் புது புது அறிவியல் வளர்ச்சிகளையும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் மற்றும் நம்முடைய வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான பல வழிகளை கற்றுக் கொள்ள வேண்டும், உதாரணமாக தற்போது பல புத்தகங்கள் நம் கண் முன்னே உள்ளன இதில் நீங்கள் எது போன்ற புத்தகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சரியாக தேர்ந்தெடுத்து கற்றல் வேண்டும்.
அதுவே உங்கள் வாழ்க்கையை முன்னேற்றமும் மற்றும் செல்வந்தர் நிலையை அடைவதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கும். நம்மை முன்னேற்றக் கூடிய புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை நம் வாழ்வில் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பல வருமான ஆதாரம் | Multiple Source of Income
நீங்கள் செல்வந்தராக வாழ விரும்பினால் ஒரு வழியில் வரக்கூடிய வருமானத்தை மட்டும் நம்பி இல்லாமல் பல வழியில் வருமானங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் சரியாக முதலீடு செய்து அதன் மூலம் நல்ல வருமானம் வரக்கூடிய பல வழிகளை வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு வழியில் மட்டுமே வரக்கூடிய வருமானம் நிலை என்று சொல்ல இயலாது ஏனென்றால் அந்த தொழிலில் ஏதேனும் பிரச்சனைகள் வர நேர்ந்தால் அதிலிருந்து வரக்கூடிய வருமானம் பாதிக்கும், இதுபோல் திடீரென்று வருமானம் நிற்கும் பொழுது அது நம் வாழ்வில் பெரும் இடர்பாடுகளை ஏற்படுத்தக் கூடும்.
பல வழி வருமானம் என்பது இது போன்ற வாழ்வில் ஏற்படக்கூடிய நெருக்கடியான சூழலை தவிர்க்கவும் மற்றும் நம்முடைய பணம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து நம்மை காப்பாற்றவும் மிக அதிக அளவு உதவியாக இருக்கும்.
உங்கள் வாழ்வில் கிடைக்கக்கூடிய ஓய்வு நேரங்களில் ஒரு சிறிய நேரத்தை இது போன்ற பிற வழி வருமானத்திற்காக முதலீடு செய்யுங்கள், இது உங்கள் வாழ்வில் பல்வேறு வருமான வழிகளை ஏற்படுத்த செய்யும்.
பணத்தை சரியாக நிர்வகிங்கள் | Manage Money Correctly
நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை நம் வாழ்வில் எவ்வாறு செலவு செய்கிறோம் என்பதை கவனத்தோடு செலவு செய்ய வேண்டும், நம் பணத்தை பல வழிகளில் செலவிடுகிறோம்.
குடும்பத்திற்காக செய்யக்கூடிய அத்தியாவசிய செலவுகள், தேவையற்ற வசதிகளுக்காக செய்யக்கூடிய ஆடம்பர செலவுகள் மற்றும் நம் வருமானத்தை இரட்டிப்பாக்கக்கூடிய முதலீட்டுச் செலவுகள், இதுபோன்ற செலவுகளில் நாம் வருமானத்தை எவ்வாறு செலவிடுவது என்பதை பற்றி சரியாக அறிந்து செயல்பட வேண்டும், அதேபோல் பணத்தை முறையாக கையாளவும் அதை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.
இதுபோன்ற சரியான முறையில் பணத்தை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ளும் பொழுது தான் பணம் சார்ந்த விஷயங்களில் நாம் மன நிறைவை அடைய முடியும்.
பட்ஜெட் கையாளுதல் | Budget Handling
நம்முடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்ய பட்ஜெட் என்பது நிச்சயம் தேவைப்படும், இதுபோன்ற சரியான முறையில் பட்ஜெட் ஏற்படுத்தி அதற்கு ஏற்ப நம்முடைய வருமானத்தை செலவிடும் பொழுது கடன் சார்ந்த விஷயங்களில் சிக்காமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.
பணம் சார்ந்த விஷயங்களை கையாளும் பொழுது தோராயமாக செலவிடுவது சரியான நிர்வாகமாக இருக்காது எனவே நம் வருமானத்தை முன்னதாகவே குறித்து வைத்து அதற்கு ஏற்ப சரியான செலவுகளை அதன் தொகை அளவில் எழுதி வைத்து அதே தொகையை செலவாக செய்யும் பொழுது நம் வருமானத்தை தேவைக்கேற்ப சரி பார்த்து அமைக்க முடியும்.
இதுபோன்று சரியான பட்ஜெட் தயார் செய்து அதற்கேற்ப செலவிடும் பொழுது நிதி சார்ந்த பிரச்சனைகளை ஏற்படாமல் நம்மை பாதுகாத்து பணம் சார்ந்த விஷயங்களில் மகிழ்ச்சியாக வாழலாம்.
கடனை தவிர்க்கவும் | Avoid Debt
நம் வாழ்க்கையில் முடிந்தவரை கடன் பெறுவதை தவிர்த்தல் வேண்டும் ஏனெனில் நாம் அதிகப்படியான கடன்களை வாங்கும் பொழுது நமக்கான வாழ்க்கை வாழ இயலாமல் கடனை அடைப்பதற்காகவே நாம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட நேரிடும்.
ஆரம்பத்தில் சிறுசிறு கடன்களை வாங்குவது சுலபமாக இருப்பதன் காரணமாக இதனை தொடர்ந்து செய்து இதுவே பெரிய கடனாக மாறிவிடுகிறது, முடிந்தவரை சிறிய கடனோ பெரிய கடனோ நம் வாழ்வில் எந்தவித கடன்களையும் வாங்காமல் வாழ்வது சிறப்பான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
நம் வாழ்வில் அதிகப்படியான கடன் இருக்கும் பொழுது தொடர்ந்து கடன் சார்ந்த விஷயங்களை சிந்தித்துக் கொண்டே இருப்போம், இதனால் நம் வாழ்வில் எப்படி முன்னேறுவது எப்படி சாதிப்பது என்ற பல கனவுகளை இழந்து விடுகிறோம்.
எனவே முடிந்தவரை கடன் இல்லாமல் இருக்கும் பொழுது நாம் சிந்தனை சரியாக செயல்படும் மற்றும் நம்முடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடியையும் சிறப்பாக எடுத்து வைக்கவும் உதவியாக இருக்கும். எனவே நாம் செல்வந்தர்களுக்கான நிலையை அடைய வேண்டுமென்றால் நாம் ஆரம்பத்திலேயே அதிகப்படியான கடன் சுமையை நம் மீது ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
தினசரி குறிக்கோளை ஏற்படுத்த வேண்டும் | Set a Daily Goal
நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளையும் நாம் துல்லியமாக கணித்து செயல்பட வேண்டும், நேரம் கடந்து சென்ற பிறகு அந்த நேரத்தை நம்மால் திருப்பி பெற இயலாது.
எனவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தை நாம் சரியாக செலவிட வேண்டும் பல செல்வந்தர்களும் அவர்களின் தினசரி நாளை சரியான வழியில் செலவிடுவார்கள். இதற்காக நாம் ஒவ்வொரு நாளும் சிறு சிறு இலக்குகளை தீர்மானித்து அதனை வென்றாக வேண்டும்.
இதுபோல் ஒவ்வொரு நாளும் சிறுசிறு இலக்குகளை தீர்மானித்து அதனை சரியாக முடிப்பதன் மூலம் நம் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. இது தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் நம்முடைய பெரிய இலக்குகளையும் சிறப்பாக அடையச் செய்யவும் உதவியாக இருக்கிறது.
எனவே நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் இது போன்ற தினசரி சிறு சிறு இலக்குகளை தீர்மானித்து சரியாக முடிக்க வேண்டும். பல செல்வந்தர்களும் மற்றும் வெற்றியாளர்களும் அவர்கள் வாழ்வில் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். இம்முறையை நீங்கள் சரியாக பின்பற்றும் பொழுது உங்களுடைய இலக்குகள் எதுவானாலும் அதை மிக வேகமாக அடைய உதவியாக இருக்கும்.
பணக்காரனாக காட்டாதே | Don't Pretend to be Rich
உங்களிடம் பணம் சேரும்பொழுது அல்லது பணக்காரராக வாழும்பொழுது நீங்கள் ஒரு பணக்காரர் என்ற தோரணையை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாது.
நீங்கள் பணக்காரர் என்பது உங்களுக்குத் தெரிந்தால் போதுமானது நீங்கள் பணம் அதிகம் உள்ளது என்பதை பிறரிடம் காட்டிக் கொள்ளும் பொழுது குறைந்த நேரம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் உங்களைப் பார்ப்பவருக்கு இது எந்தவித நஷ்டத்தையும் ஏற்படுத்தாது மாறாக உங்களை பணக்காரனாக காட்டிக் கொள்வதற்காக நீங்கள் தான் அதிகம் செலவு செய்து நஷ்டம் அடைவீர்கள்.
தேவைக்கு பயணம் செய்வதற்காக ஒரு கார் என்பது அத்தியாவசியம் என்றால் நீங்கள் பணம் அதிகமாக இருக்கிறது என பல கார்களை வாங்குவது மிகப்பெரும் முட்டாள்தனமாகும், எனவே எந்த சூழலிலும் நாம் பணக்காரர் என்பதை வெளி காட்டுவதற்காக அதிகம் செலவு செய்து நம்மை நாமே குறைபடுத்திக் கொள்ளக் கூடாது.
உண்மையில் செல்வந்தன் என்பவன் பணம் சார்ந்த விஷயங்களில் எந்தவித சூழ்நிலையிலும் நெருக்கடியான நிலை ஏற்படாமல் வாழ்வதாகும், பொதுவாக நம்முடைய வாழ்வை நாம் அனுபவித்து இன்பமாக வாழ வேண்டுமே தவிர பிறரிடம் நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதை தெரிவிப்பது உண்மையான செல்வ நிலை அல்ல.
இதற்காக விலை உயர்ந்த ஆடைகளையும் விலை உயர்ந்த உணவகங்களில் உணவு உண்பதையும் நான் தவறு என்று கூறவில்லை, நமக்கு இதுபோன்ற விஷயம் இன்பம் தருவதாகவும் மற்றும் இதன் மூலம் நமக்கு ஏதேனும் ஆதாயம் உள்ளது என்றாலும் செய்வதில் எந்தவித தவறும் இல்லை ஆனால் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் பிறருக்காக இதுபோன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம், உண்மையில் எந்த செல்வந்தரும் நான் செல்வந்தன் என்பதை வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
உங்கள் Business - ஐ உருவாக்குங்கள் | Build Your Business
உங்களுக்கென்று ஒரு சரியான பிசினஸை தயார் படுத்த வேண்டும். உண்மையான பல செல்வந்தர்கள் பிறரிடம் வேலை செய்து வருமானம் ஈட்டுவது இல்லை அவர்கள் சொந்தமாக அவர்களுக்கென்ற பிசினஸை தயார் செய்து கொள்கின்றனர்.
பிசினஸ் என்பது பல இடர்பாடுகளை உடையது என்பதால் பலரும் இதனை ஏற்படுத்த முன்வருவதில்லை ஆனால் உண்மையான செல்வந்தர்கள் அவர்களுக்கு என்ற பிசினஸை அவர்கள் சரியான அறிவோடு கையாண்டு அதனை மேம்படுத்தி கொள்வார்கள்.
வேலை செய்வது மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் நிலையானது என்றாலும் கூட அந்த வருமானம் என்பது நாம் செய்யும் உழைப்பிற்கு மிக குறைவான வெகுமதி என்பதை அறிய வேண்டும், ஆனால் வணிகம் என்பது நீங்கள் என்ன உழைப்பை செலுத்துகிறீர்களோ அதற்கான சரியான ஆதாயத்தை பெற முடியும்.
பிசினஸை பற்றிய உங்கள் சிந்தனை எவ்வாறு உள்ளது என்பதையும் மற்றும் உங்களின் மேலாண்மை திறனையும் பொறுத்து உங்கள் பிசினஸை வளர்த்துக் கொள்ள முடியும். எனவே நீங்கள் செல்வந்தராக மாற விரும்பினால் ஆரம்பத்தில் வேலை செய்து வருமானம் ஈட்டினாலும் கூட முடிந்தவரை மிக வேகமாக ஏதேனும் தொழில் ஆரம்பித்து தொழில் ரீதியான வருமானத்தை பெற வேண்டும்.
நேர மேலாண்மை | Time Management
நாம் நேரத்தை சரியாக கையாளும் திறனை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனென்றால் நேரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும் நேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது, பல செல்வந்தர்களும் மற்றும் வெற்றியாளர்களும் அவர்களின் நேரத்தை சரியாக தீர்மானிக்கின்றனர்.
நேரத்தை தீர்மானிப்பது மட்டும் இல்லாமல் அதனை சரியாக கையாண்டு மேலாண்மை செய்கின்றனர் இது அவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் சரியாக செய்து முடிக்க பெரும் உதவியாக இருக்கிறது.
நம் வாழ்வில் எந்த விஷயத்திற்கும் காலம் தாமதிக்காமல் சரியான நேரத்தில் செய்து முடித்திட வேண்டும் இதுபோல் நாம் செய்ய வேண்டிய விஷயங்களை சரியான நேரத்தில் செய்து முடிக்கும் பொழுது அதிகப்படியான ஓய்வு நேரம் கிடைக்கிறது இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி வேறு ஏதேனும் ஒரு தளத்தில் முதலீடாக செய்யலாம். நாம் செல்வந்தராக மாறுவதற்கு நேரத்தை சரியாக கையாளும் திறனை கற்றுக் கொள்வது வேண்டும்.

0 கருத்துகள்