How to earn money from photo editing

6 Way to Earn Money From Photo Editing| புகைப்பட எடிட்டிங் மூலம் பணம் சம்பாதிக்க 6 வழி

How to earn money from photo editing



பின்வரும் இந்த 6 குறிப்புகள் மூலம் நீங்கள் போட்டோ எடிட்டிங் திறனை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க இயலும், இதனை நீங்கள் முழு நேர பணியாக செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை பகுதி நேர பணியாக கூட செய்து பணம் ஈட்ட இயலும், இதற்கு போட்டோ எடிட்டிங் செய்ய தெரிந்தால் மட்டும் போதுமானது. 

  1. Visiting Cards and Banner Editing
  2. Marriage and festival Editing
  3. Advertising and  Discount Editing
  4. YouTube Thumbnail Editing
  5. Album Photo Editing
  6. Brand Logo Design Editing


Visiting Cards and Banner Editing | விசிட்டிங் கார்டு மற்றும் பேனர் டிசைன் எடிட்டிங் 

சிறு சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவரும் மக்களிடம் தன் கடைகளை பற்றியும் தன் நிறுவனத்தை பற்றியும் வெளிக் காட்ட விசிட்டிங் கார்டு மற்றும் பேனர்கள் அத்தியாவசிய ஒன்றாக உள்ளது, இது போன்று தொழில் செய்யும் அனைவரும் தன் விசிட்டிங் கார்டு மற்றும் பேனர்களை மக்களைக் கவரும் படியாக வடிவமைப்பதில் அதிகம் அக்கறை காட்டுவார்கள். இது போன்ற இடத்தில் தான் உங்களுடைய Photo Editing திறமை அவர்களுக்கு தேவைப்படுகிறது. இது போன்று தொழில் செய்பவர்களுக்கு நீங்கள் விசிட்டிங் கார்டு மற்றும் பேனர் போன்றவைகளை தயார் செய்து கொடுத்து லாபம் ஈட்டலாம். நிறுவனங்களிடம் வாய்ப்பு கேட்டு அணுகும் போது நீங்கள் எடிட்டிங் செய்ய தெரியும் என்பதை மட்டுமே வெளிப்படுத்தாமல் முன்னதாகவே சில Model விசிட்டிங் கார்டு மற்றும் பேனர்களை தயார் செய்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு காட்டலாம், இதுபோல் நீங்கள் நிறுவனத்திடம் வாய்ப்புகள் கேட்கும் போது உங்களைக் காட்டிலும் உங்கள் திறமையே அதிகம் பேச வேண்டும். ஆரம்பத்தில் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சிறு சிறு கடைகளிடம் தான் உங்களுக்கு வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன, ஏனென்றால் பெரும்பாலான சிறு நிறுவனங்கள் ஆரம்பத்தில் விசிட்டிங் கார்டு மற்றும் பேனர்களில் பெரிய அக்கறை காட்டுவதில்லை அவர்களிடம் இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மற்றும் அவர்களின் நிறுவனத்திற்கு ஏற்ப விசிட்டிங் கார்டு மற்றும் பேனர்களை டிசைன்ஸ் செய்து காண்பித்தும் அவர்களிடம் ஆர்டர்களை பெறலாம். இதில் உங்கள் திறமைக்கேற்ப தொகையினை நிர்ணயித்து பெற்றுக் கொள்ளலாம். 


Marriage and festival Editing | திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு எடிட் செய்தல்

புகைப்படங்கள் என்பது நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது ஏனென்றால் நடந்து முடிந்த பல நிகழ்வுகளை புகைப்படங்கள் தான் எப்போதும் நம் கண் முன் வந்து நிறுத்தும். 

குறிப்பாக சில சுப நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை நாம் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்கிறோம் இந்த புகைப்படங்களை வெறும் புகைப்படமாக அப்படியே வைத்துக் கொள்ளாமல் அதற்கு மேலும் அழகு கூட்டி வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள் அது உங்கள் எடிட்டிங் திறமையில் தான் உள்ளது. 

விழாவில் நடக்கக்கூடிய சில முக்கிய நிகழ்வுகளை புகைப்படமாக பார்க்கும் தருவாயில் அவர்களுக்கு எப்போதுமே இன்பம் தான் எனவே இது போல் உங்கள் எடிட்டிங் திறமையை பயன்படுத்தி அவர்களுக்கு நிகழ்ச்சி மற்றும் விழாக்களின் புகைப்படங்களை மேலும் அழகாக்கி கொடுக்க இயலும் இதன் மூலம் நீங்களும் நல்ல வருமானத்தை பேசலாம். 


Advertising and  Discount Editing | விளம்பரம் மற்றும் தள்ளுபடி சார்ந்த போட்டோ எடிட்டிங்

நிறுவனங்கள் அவர்களின் வியாபாரத்தை அதிகரிப்பதற்காக சில குறிப்பிட்ட காலங்களில் தள்ளுபடி மற்றும் விளம்பரங்களை அறிவிக்கின்றனர், இப்போதுள்ள காலகட்டத்தில் விளம்பரம் மற்றும் தள்ளுபடி போன்ற விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல சிறந்த வழி இணையதளம் மட்டுமே இதனை எழுத்து மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை விட புகைப்படங்களாகவே கொண்டு சேர்க்கின்றன, இந்த விளம்பர மற்றும் தள்ளுபடி புகைப்படங்களை நீங்கள் எடிட் செய்து தருவதன் மூலம் வருமானம் ஈட்டலாம், குறிப்பாக விழா காலம் மற்றும் தள்ளுபடி மாதங்களில் முறையான இடத்தை அணுகும் போது, அதிக வாய்ப்புகளும் கிடைக்கும் அது மட்டுமல்லாமல் நல்ல வருமானத்தையும் பெறலாம். 


YouTube Thumbnail Editing | யூடியூப் Thumbnail எடிட்டிங்

youtube வீடியோ அப்லோடு செய்யும் யூடியூபர்களுக்கு வீடியோ வியூஸ் அதிகரிப்பதற்கு பெரும்பாலும் இந்த youtube Thumbnail உதவுகிறது, youtube Thumbnail என்பது வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை மக்கள் பார்ப்பதற்கு முன்பாக மக்களிடம் காட்டக்கூடிய முகப்பு புகைப்படம் தான். இந்த புகைப்படத்தினை பார்த்து தான் மக்கள் கிளிக் செய்து வீடியோவை பார்க்கின்றனர். இதனை பெரும்பாலும் யூட்யூபர்களே எடிட் செய்து கொள்வார்கள் ஆனால் அவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும் பொழுது வேறு சில எடிட்டர்களை நாடுவார்கள் எனவே இதுபோல இருக்கும் யூடியூபர்களை தொடர்பு கொண்டு உங்கள் எடிட்டிங் திறமையை கூறி வாய்ப்புகள் பெறலாம், போட்டோ எடிட்டிங் மட்டும் இல்லாமல் வீடியோ எடிட்டிங் செய்யும் திறமையும் இருந்தால் வாய்ப்பு கிடைக்க நிறைய சாத்தியங்கள் உள்ளது. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப யூடியூப் தம்மைல்களை டிசைன் செய்து கொடுப்பதன் மூலம் நீங்கள் வருமானம் பெறலாம். 


Album Photo Editing | ஆல்பம் ஃபோட்டோ எடிட்டிங்

முன்னர் பார்த்தது போலவே இதுவும் முக்கிய நிகழ்ச்சி மற்றும் அவர்களின் மகிழ்ச்சி தருணங்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடிட் செய்து கொடுப்பதாகும், இது திருமணம் மற்றும் பிற முக்கிய நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் ஒரு சிலர் அவர்கள் செல்லக்கூடிய பயணத்தையும் ஆல்பமாக தயார் செய்து வைத்துக் கொள்வார்கள் இவர்களையும் தொடர்பு கொண்டு உங்கள் எடிட்டிங் திறமை மூலம் நல்ல வருமானம் பெறலாம், குறிப்பாக உங்களிடம் புகைப்படம் எடுக்க கேமரா இருக்கும் பட்சத்தில் உங்கள் வருமானம் பல மடங்கு அதிகரிக்கலாம் நீங்களே சுயமாக புகைப்படங்கள் எடுத்து அந்த புகைப்படங்களை எடிட் செய்து கொடுக்கலாம், சுயமாக கேமரா இல்லாத போது கேமரா வைத்திருக்கக்கூடிய ஸ்டூடியோக்களை தொடர்பு கொண்டு அவர்கள் எடுக்கக்கூடிய புகைப்படங்களை நீங்கள் எடிட் செய்து கொடுத்தும் வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம். 


Brand Logo Design Editing | பிராண்ட் லோகோ எடிட்டிங்

ஒவ்வொரு நிறுவனங்களும் லாபத்திற்கு அடுத்தபடியாக அவர்களின் பிராண்டை வளர்ப்பதில் தான் பெரும் நோக்கமாக வைத்திருப்பார்கள், இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் அவரவருக்கான தனித்தனி பெயர் மற்றும் தனி தனி (Logo) முத்திரை டிசைன்களை தயார் செய்து வைத்துக் கொள்கின்றன.இதுபோன்ற லோகோ நிறுவனங்களுக்கு மட்டும் இல்லாமல் பல youtube சேனல் மற்றும் பிற இணையதள வெப்சைடுகளுக்கும் தேவைப்படுகிறது. நீங்கள் இதுபோன்ற நபர்களை தொடர்பு செய்து அவர்களிடம் உங்கள் வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம், இதுபோன்று லோகோ எடிட் செய்யும் பொழுது அதிக வேலைப்பாடுகள் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை மாறாக உங்கள் டிசைன் தனித்துவமாக தெரியும் பட்சத்தில் உங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதுபோல் லோகோ டிசைன் செய்வதில் கூட பலர் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர், உங்களுக்கு என்று தனி (social media) இணையதள பக்கங்களை துவங்கி இதன் மூலம் கூட ஆர்டர்களை பெற்று நல்ல வருமானத்தை பெறலாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்