How to earn money online

Top Eight Ways to Make Money Online | ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த எட்டு வழிமுறைகள்

Top Eight Ways to Make Money Online  ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த எட்டு வழிமுறைகள்



  • Blogging
  • YouTube
  • Influencer
  • Photo selling
  • Online teaching
  • Affiliate marketing
  • Content creator
  • Ebook


இந்தப் பதிவில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க  எட்டு வழிமுறைகளை வழங்குகிறேன். இந்த எட்டு வழிகளை நீங்கள் சரியாக பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக நல்ல வருமானத்தை பெறலாம், இதற்கு அதிகப்படியான தொகை முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை முதலீடு இல்லாமல் உங்கள் கையில் இருக்கக்கூடிய மொபைல்  ஃபோனும் அதில் ஒரு இன்டர்நெட் கனெக்ஷன் இருந்தாலே போதுமானது. 

இதில் நான் கூறியுள்ள இந்த எட்டு வழிகளின் மூலம் பணம் சம்பாதிக்க அதிகப்படியான நேரம் செலவாகாது நீங்கள் உங்கள் தினசரி பணியை செய்து கொண்டே குறைந்த நேரம் செலவழித்து சிறப்பான வருமானத்தை பெறலாம். இப்போது ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான இந்த எட்டு வழிமுறைகளை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.


யூடியூப் | YouTube

இப்போது அனைவராலும் அறியப்பட்ட ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான சிறப்பான வழியில் இந்த youtube வருமானமும் ஒன்றாகும். இந்த தளத்தில் உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை வீடியோவாக தயார் செய்து தொடர்ந்து பதிவிடுவது மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெறலாம்.

இதில் உங்களுக்குத் தெரிந்த கருத்துக்கள் அல்லது உங்கள் தனித் திறமை என்று அனைத்து நல்ல விஷயங்களையும் பதிவிடலாம். இந்த யூடியூப் சேனல் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டுவதற்கு சில தகுதிகளை நிறைவு செய்ய வேண்டும், உங்கள் வீடியோக்கள் நிறைய பார்வையாளர்களை பெற்று இந்த தகுதிகளை நிறைவு செய்யும் போது உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான தகுதியை அடைவீர்கள் இந்த தகுதியை பெற்றவுடன் நீங்கள் வருமானம் ஈட்ட ஆரம்பித்து விடலாம். 

இதற்கு உங்களிடம் ஒரு மொபைல் போன் இருந்தாலே போதும் ஆரம்பத்தில் இதுபோன்ற மொபைல் போன்களை மட்டுமே பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்தவற்றை வீடியோவாக எடுத்து யூடியூப் தளத்தில் பதிவு செய்யலாம். இப்போதுள்ள காலகட்டத்தில் youtube சேனலை பயன்படுத்தி பல நபர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.


Blogging | வலைப்பதிவு

இது நாம் முன்னர் பார்த்தது போலவே கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம் வருமானம் பெறக்கூடிய வழியாகும், ஆனால் இது எழுத்து வடிவில் நாம்  எழுத வேண்டும் இதனை படித்து மக்கள் பார்ப்பதன் மூலமாக வருமானம் பெறலாம். இதற்காக நீங்கள் உங்கள் மொபைல் போனில் ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் இந்த வலைதளத்தை உருவாக்க பிளாக்கர் தளத்தை பயன்படுத்துவதன் மூலம் இலவசமாக துவங்கி கொள்ளலாம். 

இதிலும் உங்கள் சொந்த கருத்துக்களை தொடர்ந்து எழுத்து மூலமாக பதிவு செய்து வர வேண்டும். உங்கள் தளத்தில் போதுமான அளவு பதிவுகளை இட்ட பின்னர் நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான தகுதியை பெற்று விடுவீர்கள் இதற்குப் பின்னால் பணம் சம்பாதிப்பதற்கான அமைப்புகளை சரி செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துக் கொள்ளலாம். 

இதற்கு உங்களிடம் நல்ல சிந்தனை திறனும் நீங்கள் சிந்தித்தவற்றை சரியான முறையில் தெளிவாக மக்களுக்கு புரியும் படி எழுதும் திறனும் இருந்தால் போதுமானது. இதற்கு உங்களுக்கென்று ஒரு தனி வலைதளத்தை ஏற்படுத்தி அதில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து ஒரு நல்ல வருமானத்தை பெறலாம்.


Influencer | செல்வாக்கு செலுத்துபவர்

இப்போது பல மக்கள் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு நல்ல வருமானத்தை பெற்று வருகின்றனர், இது எப்படி என்று முழு விளக்கத்தை பார்க்கலாம். 

இதற்கு முதலில் உங்களிடம் ஏதேனும் ஒரு சமூக தளத்தை நன்கு பயன்படுத்தி அதில் நிறைய பாலோவர்களை (Followers) பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்று ஏதேனும் ஒரு சமூக தளத்தில் நல்ல அந்தஸ்தை பெற்று விட்டீர்கள் என்றால் உங்கள் செல்வாக்கை பிற தொழில் அதிபர்கள் அவர்களின் பொருள்களை விற்பனை செய்வதற்கும் அதனை பிரபலப்படுத்துவதற்கும் உங்களை அணுகுவார்கள் இந்த விளம்பரப்படுத்ததற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுவிட்டு அவர்களின் பொருள்களை தனது சமூக தளத்தில் நாம் பதிவு செய்து அதனை விளம்பரம் செய்தல் வேண்டும், இதனை மட்டும் பயன்படுத்தியே பல பிரபலங்கள் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.


Photo selling | புகைப்படம் விற்பனை

உங்களுக்கு சிறப்பான முறையில் புகைப்படங்கள் எடுக்க தெரியும் என்றால் இந்த முறையை பயன்படுத்தி நல்ல வருமானத்தை பெறலாம். இதற்கு விலை உயர்ந்த கேமராக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை அதற்கு மாறாக இப்போது வரக்கூடிய மொபைல்களே சிறப்பான போட்டோக்களை எடுக்க வல்லதாக உள்ளது. 

நல்ல புகைப்படங்களை எடுத்து மேலும் அழகூட்ட வேண்டும் என்றால் எடிட்டிங் செய்து கூட நீங்கள் இந்த புகைப்படங்களை ஆன்லைனில் விற்பனை செய்யலாம். 

புகைப்படங்கள் விற்பனை செய்வதற்கு என்று பல இணையதளங்கள் உள்ளன. எனவே இது போன்ற இணையதளங்களை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை பதிவேற்றி அதில் நல்ல வருமானத்தை பெறலாம்.


Online teaching | ஆன்லைன் கற்பித்தல்

இப்போது பல சமூக வலைத்தளங்கள் உள்ளன இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம், உங்களுக்கு பிடித்த சமூக தளத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு இதில் உங்களுக்குத் தெரிந்தவற்றை கற்பித்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். 

உங்களுக்குள் இருக்கும் திறமையையும் கலைகளையும் பிறருக்கு பாடமாக கற்பிக்கலாம், இது போல் கற்பிக்கும் பொழுது அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் கற்பிப்பதற்காக பெற்றுக் கொள்ளலாம். இதில் உங்களுக்கு மாணவர்கள் எவ்வளவு அதிகமாகிக் கொண்டிருக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல உங்களின் வருமானமும் பெருகிக்கொண்டே இருக்கும் எனவே மாணவர்களுக்கு புரியும் படியாக தெளிவான முறையில் தொடர்ந்து கற்பித்தல் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டலாம். 

உதாரணமாக உங்களுக்குத் தெரிந்த கல்வி, நடனம், பாடல், எடிட்டிங் போன்ற பல கலைகளை கற்பித்து நல்ல வருமானம் பெறலாம்.


Affiliate marketing | இணைந்த சந்தைப்படுத்தல்

இதிலும் உங்களுக்கு என்று ஒரு சமூக தளத்தை ஏற்படுத்தி அதில் நல்ல ஃபாலோவர்களை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இணையதளத்தில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதற்கான லிங்க்கை உங்கள் சமூக தளத்தில் பதிவு செய்து அந்தப் பொருளை விற்பனை செய்ய உதவுவதற்காக விற்பனையாளரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெறுவீர்கள் இதுவே அஃப்ளைட் மார்க்கெட்டிங் ஆகும்.

இதில் நீங்கள் பதிவு செய்யப்படும் லிங்குகளை பயன்படுத்தி எத்தனை நபர்கள் அந்த பொருட்களை வாங்குகிறார்களோ அதற்கு ஏற்றார் போல உங்கள் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கும், உதாரணமாக யூடியூப் வீடியோக்களில் இதுபோன்ற ஆஃப்லைன் லிங்குகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாக பெறலாம்.


Content creator | கண்டன்ட் கிரியேட்டர்

இப்போது பல்வேறு சமூக வலைதளங்கள் உள்ளன இதில் அனைவரும் பல கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கின்றனர் மற்றும் இதில் போதுமான அளவு கருத்துக்களை அவர்களால் தயார் செய்ய இயலவில்லை எனில் பிற யாரேனும் கருத்துக்கள் தயார் செய்து கொடுப்பதாக இருந்தால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிப்பதற்கு தயாராக உள்ளனர். 

அவர்களுக்கு தினசரி பதிவிடும் வகையில் ஏதேனும் ஒரு கருத்துக்கள் தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும் எனவே இது போன்ற கருத்துக்களை நீங்கள் புது புது விதமாக சிந்தித்து அவர்களுக்கு அளிக்கும் பொழுது அதன் மூலம் ஒரு நல்ல வருமானத்தை பெறலாம்

குறிப்பாக பல பிரபலங்கள் தனது சமூக பக்கங்களில் பதிவு செய்வதற்கான கருத்துக்களை பிறரிடம் இருந்து பெறுகின்றனர். இதற்காக நீங்கள் ஆன்லைனில் யூடியூப் வீடியோக்கள் பதிவு செய்யும் நபர்களையோ அல்லது பிளாக்கரில் போஸ்ட் பதிவிடும் நபர்களையோ அணுகலாம். இதேபோன்று பல நபர்களுக்கு கருத்துக்கள் தயார் செய்து அளிப்பதன் மூலம் ஒரு நல்ல வருமானத்தை பெறலாம்.


Ebook | இணைய புத்தகம்

உங்களுக்கு நல்ல சிந்தனை திறனும் அதை மக்களுக்கு தெளிவாக புரியும் படி எழுதும் திறனும் இருந்தால் இந்த இணைய புத்தகம் விற்பனை உங்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தரும். 

இதற்கு முதலில் நீங்கள் ஒரு புத்தகம் தயார் செய்யப் போகிறீர்கள், உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயத்தைப் பற்றியோ அல்லது ஏதேனும் சிறு கதைகளோ அல்லது கவிதைகளோ எதுவானாலும் அதனை தெளிவாக மக்களுக்கு புரியும்படி  Notepad நோட்பேடுகளில் எழுதி அதை ஒரு பிடிஎஃப் (PDF) ஆக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள், இந்த பிடிஎஃப் புத்தகம் யாருக்கு பயன்படும் வகையில் இருக்குமோ அவர்களிடம் விற்பனை செய்து அதற்கு ஏற்ற வருமானத்தை பெற வேண்டும்.

ஆன்லைனில் விற்பதற்கென்று பல தளங்கள் உள்ளன, இந்த தளங்களில் உங்கள் புத்தகத்தை வெளியிட்டும் விற்பனை செய்யலாம் அல்லது உங்களுக்கென்று தனி சமூக தளங்களை ஏற்படுத்தி அந்த புத்தகத்தை விற்பனை செய்து புத்தகத்திற்கு ஏற்ற விலையினை நிர்ணயித்து வருமானம் பெறலாம். உங்கள் புத்தகத்தில் மக்களுக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் இந்த புத்தகத்தின் விற்பனை அதிகமாக ஏற்படும் இது உங்கள் வருமானத்தையும் அதிகப்படுத்தி தரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்