how to improve video quality

How to Improve Video Quality?  | வீடியோ தரத்தை மேம்படுத்துவது எப்படி? 


How to Improve Video Quality with editing

  • Stable and Proper Cuts
  • Color Correction
  • Lighting
  • Sound Effects
  • Clear Voice Recording
  • Overlay and Text
  • Call to action
  • Screan Size And Quality

இந்தப் பதிவில் பார்வையாளர்களின் கவனத்தை அதிகரிக்கும் வகைகள் அற்புதமான வீடியோக்களை எவ்வாறு எடிட் செய்வது என்பதை பற்றிய முழு விளக்கத்தை பார்க்கலாம், இதில் கூறியுள்ள இந்த கருத்துக்களை சரியாக பயன்படுத்தும் பொழுது உங்கள் வீடியோவின் தரத்தை நன்கு உயர்த்த முடியும். 

இது உங்கள் வீடியோவின் குவாலிட்டியை அதிகரிக்கச் செய்வது மட்டும் இல்லாமல் உங்கள் வீடியோவிற்கான பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கவும் பெரும் அளவு உதவி செய்யும். 


Stable and Proper Cuts | நிலையான மற்றும் சரியான வெட்டுக்கள்

உங்கள் வீடியோவிற்கு தேவைப்படும் இடங்களில் கட் சேர்ப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும் நாம் வீடியோவில் போதுமான அளவு கட் செய்யாமல் வீடியோவை தொடர்ந்து நிலையாக பார்த்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களின் ஆர்வத்தை குறைத்து விரக்தியை ஏற்படுத்துகிறது. 

எனவே உங்கள் வீடியோவில் எந்தெந்த இடத்தை கட் செய்து ட்ரான்ஸ்லேஷன் எபெக்ட் ஆட் செய்ய இயலுமோ அந்த இடங்களை துண்டித்து அதற்கான ட்ரான்ஸ்ஸிஷன் Transition Effect எபெக்ட்களை ஆட் செய்யுங்கள். இதனை உங்கள் வீடியோவில் பயன்படுத்தும் பொழுது பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்க்க பெருமளவு உதவி செய்யும். 

அதேபோல் அதிகப்படியான இடங்களில் ஆட் செய்ய வேண்டாம் இதுபோல் தொடர்ந்து பல இடங்களை வீடியோவை துண்டித்து எடிட் செய்யும்பொழுது வீடியோ பார்ப்பதற்கு ஒருநிலைத் தன்மை அற்று அதிகப்படியாக வீடியோ அசைந்து கொண்டே இருக்கும் போலான காட்சியை பார்வையாளர்களுக்கு தரும் இது பார்வையாளர்களின் விருப்பத்தை குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. 

எனவே தேவைப்படும் இடங்களில் மட்டும் போதிய அளவு இடைவெளியில் சரியாக வீடியோவினை துண்டித்து ட்ரான்ஸ்ஸிஷன் எபெக்ட் Transition Effect களை ஆட் செய்வது உங்கள் வீடியோவின் தரத்தையும் மதிப்பையும் அதிகரிக்க உதவும். 


Color Correction | வண்ண திருத்தம்

இந்த கலர் கரச்சனை சரியாக பயன்படுத்தியே பல YouTubers தங்களின் வீடியோவின் தரத்தை நன்கு உயர்த்திக் கொள்கின்றனர், நாம் பார்க்கும் பொழுதே இந்த வீடியோக்கள் திரைப்படம் போன்றான பார்வையை நமக்கு அளிக்கிறது, இதனைப் பயன்படுத்தி பல பார்வையாளர்களை கவர்ந்து அவர்களின் லைக்ஸ் மற்றும் சப்ஸ்கிரைப்களை பெருக்கிக் கொள்கின்றனர்.

இந்த கலர் கரெக்ஷன் என்பது உங்கள் வீடியோவின் தரத்தை அதிகரிக்கச் செய்யும் மிக முக்கிய அமைப்பாகும் இந்த Color correction பயன்படுத்தும் பொழுது உங்களின் வீடியோ தரம் நன்றாக இருக்கும்.

நீங்கள் எடுக்கப்பட்ட வீடியோ நவீன கேமராக்களை பயன்படுத்து எடுத்திருந்தாலும் அல்லது மொபைல் ஃபோன்களை பயன்படுத்தி எடுத்து இருந்தாலும் இந்த கலர் கரெக்ஷன் சரியாக எடிட் செய்யும்பொழுது உங்கள் வீடியோவின் தரத்தை முழுவதுமாக பெற இயலும். எனவே நீங்கள் எடிட் செய்யும் யூடியூப் வீடியோக்களுக்கு கண்டிப்பாக இந்த கலர் கரெக்ஷன் அட் செய்யுங்கள்.

நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களுக்கு நிலையான ஒரு கலர் கரெக்ஷனை தேர்ந்தெடுத்து அதனை அனைத்து வீடியோவிலும் பயன்படுத்துங்கள் இது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து உங்களின் சேனலின் வளர்ச்சிக்கு பெரும் அளவு உதவி செய்யும் இதுவே பல youtube சேனல்கள் கையாளும் மிகப்பெரிய யுக்தி ஆகும்.


Lighting | வெளிச்சம்

நீங்கள் பல youtube வீடியோக்களை பார்த்திருக்கலாம் அதில் அவர்களின் ஸ்டுடியோ செட்டப்பில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏதேனும் ஒரு நிறத்தின் வெளிச்சத்தை ஒளிர வைத்திருப்பார்கள் மற்றும் இதனை நாம் கூர்ந்து கவனிக்கும் பொழுது யூட்யூபில் பேசக்கூடிய நபர்களின் பிற்பகுதியிலோ அல்லது பின்னால் இருக்கக்கூடிய சுவர்களின் மீதோ அந்த ஒளி ஒளிரும். 

இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா இதற்கும் எடிட்டிங் களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை பற்றி பார்த்தால் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதுபோல் வீடியோவின் பின்னால் ஒளிர வைக்கக்கூடிய வெளிச்சம் நம் வீடியோவில் பதிவாகும் பொழுது அதனை எடிட் செய்து கலர் கரெக்சன் அட் செய்யும் பொழுது அதற்கு தகுந்தார் போல அந்த ஒளியும் அதன் வெளிச்சத்தை மாற்றிக் கொள்ளும் இது பார்க்கும் பொழுது ஓர் அற்புதமான காட்சியை பார்வையாளர்களுக்கு தருகிறது. 

குறிப்பாக youtube இல் நம் வீடியோவை பார்க்கக்கூடிய பார்வையாளர்கள் நம் வார்த்தையில் கவனம் குறையும் பொழுது நம் வீடியோவின் பின்னால் ஒளிர வைத்துள்ள இந்த விளக்குகளின் மீது தான பார்வை அதிகரிக்கும், இதுபோல் ஏதோ ஒரு விதத்தில் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் நம் வீடியோக்குள் பதிய செய்யும் பொழுது அவர்கள் நம் வீடியோவை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது, இதன் முக்கியத்துவத்தை அறிந்தே பல யூ டுபர்கள் தன்னுடைய வீடியோவில் பின்னால் இது போன்ற பல வண்ண ஒலிகளை ஒளிர செய்கின்றனர். 


Sound Effects | ஒலி இணைத்துக் கொள்ளுதல்

நம் வீடியோவின் ஒவ்வொரு அசைவிலும் அல்லது ஒவ்வொரு முக்கியமான கருத்துகளை தெரிவிக்கும் பொழுதும் இது போன்ற சில ஒலிகளை இணைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும், இதுபோல் நம் வீடியோவின் அசைவிற்கேற்ப ஒலிகளை ஆட் செய்யும் பொழுது பார்வையாளர்கள் தன் முழு கவனத்தையும் இந்த வீடியோவின் மேல் செலுத்துவார்கள் மற்றும் நாம் கூறக்கூடிய கருத்துக்கள் முழுமையாக அவர்களை சென்றடையவும் இதுபோன்று ஒலி இணைப்புகள் மிக உதவி செய்கிறது.

 எனவே நம் வீடியோவில் தேவைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் அதற்கு சம்பந்தமான ஒலிகளை சேர்ப்பது மிக கட்டாயமான ஒன்றாகும் இந்த அமைப்புகளை சரியாகப் பயன்படுத்தி பல பிரபலமான யூடியூபர்கள் தன் வீடியோவின் தரத்தை நன்கு உயர்த்திக் கொள்கின்றனர். 

 இதுபோன்று நம் youtube வீடியோக்களில் தேவைக்கேற்ப ஒலிகளை பயன்படுத்தும்பொழுது மக்களின் முழு கவனத்தையும் வீடியோவின் மீது செலுத்த வைப்பதுடன் மற்றும் மீண்டும் மீண்டும் ஆர்வத்துடன் நம் வீடியோக்களை பார்க்க செய்யவும் உதவி செய்கிறது. 

நம் யூடியூப் வீடியோக்களை எடிட் செய்யும்பொழுது இந்த சவுண்ட் எபெக்ட் Souund Effect களை ஆட் செய்ய மறக்க வேண்டாம் இந்த சவுண்ட் எபெக்ட்டுகளை நம் வீடியோவில் நிச்சயமாக பயன்படுத்தி நல்ல வளர்ச்சியை பெறலாம். 


Clear Voice Recording | தெளிவான குரல் பதிவு

பார்வையாளர்கள் நம் வீடியோவை பார்க்கும் பொழுது அதில் கூறக்கூடிய கருத்து தெளிவாக அவர்களை சென்றடையும் பட்சத்தில் அவர்கள் நம் வீடியோவை தொடர்ந்து பார்க்க விரும்புவார்கள் இது உங்களுக்கென ஒரு நிலையான பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யவும் உதவி செய்யும்.

உங்கள் வீடியோவின் தரத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது உங்களின் குரல் பதிவே ஆகும், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குரல் பதிவினை நாம் எவ்வளவு தெளிவாக உச்சரிக்கிறோம் என்பது மிக அவசியமாக பார்க்க வேண்டிய ஒன்றாகும், நமக்கு எவ்வளவு பேச்சு திறமைகள் இருந்து நாம் நல்ல முறையில் பேச்சுக்களை வீடியோவில் பேசி இருந்தாலும் இதில் குரல் பதிவு சரியாக இல்லாவிடில் நம் வீடியோவை இது நிச்சயமாக பாதிக்கும், உதாரணமாக நீங்கள் எவ்வளவு தெளிவான பல முக்கிய கருத்துக்களை உங்கள் வீடியோவில் பதிவு செய்தாலும் பின்னால் இயங்கக்கூடிய இரைச்சல்கள் மூலம் உங்கள் குரல் நிச்சயம் பாதிப்படையலாம், எனவே முடிந்தவரை பின்னால் இரைச்சல்கள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டு நம் குரலை பதிவு செய்வது மிக முக்கியமாகும். 

ஆனால் இது போன்ற வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை பல இரைச்சல்கள் மத்தியிலேயே வாய்ஸ் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தம் வாய்ஸ்கலை எடிட் செய்து நம் வீடியோவில் பயன்படுத்த வேண்டும், இப்போது youtube வீடியோவில் Voice வாய்ஸ் களை ஆட் செய்யும் முன்னரே அந்த வாய்ஸ் களை எடிட் செய்வதற்கான பல முறைகள் உள்ளன, இதனைப் பயன்படுத்தி உங்கள் பின்னால் வரக்கூடிய Noise இரைச்சல்களையும் மற்றும் உங்கள் வீடியோவின் வாய்ஸ் இன் Quality தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். 

எனவே முடிந்தவரை நம் வீடியோவில் ஆட் செய்யும் குரல் பதிவு தெள்ளன் தெளிவாகவும் எவ்வித இறைச்சல்களும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியமாகும் இதனை சரியாக கையாண்டு பல பிரபலமான யூடியூபர்கள் தன் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றனர்.


Overlay and Text | மேலடுக்கு மற்றும் எழுத்து

இப்போது பலவிதமான youtubers தன் வீடியோவில் Overlay ஓவர் லேகலை பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்று நம்முடைய வீடியோவில் ஓவர் லேக்ளையும் டெஸ்ட் கலையும் ஆட் செய்யும் பொழுது பார்வையாளர்கள் அதிக ஆர்வத்துடன் நம் வீடியோக்களை பார்ப்பார்கள்.

இது நம் வீடியோ மீதான பார்வையாளர்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்து நாம் பார்வையாளர்களை அதிகரிக்க செய்கிறது. உதாரணமாக நாம் கூறக்கூடிய கருத்து பற்றிய புகைப்படம் அல்லது வீடியோக்களை Youtube வீடியோவில் ஆட் செய்வதாகும் இது மட்டும் இல்லாமல் நாம் முக்கியமாக கூறக்கூடிய சில சொற்களை எழுத்து மூலமாக வீடியோவில் பதிவு செய்வதும் பார்வையாளர்களின் நம் வீடியோ மீதான கவனத்தை அதிகரிக்க செய்கிறது.

எனவே நாம் எடிட் செய்யும் வீடியோவில் தேவைக்கேற்ப Overlay And Text ஓவர்லே க்ளையும் மற்றும் டெக்ஸ்ட் கலையும் ஆட் செய்ய மறக்க வேண்டாம் இது நம் வீடியோவின் தரத்தையும் ஆர்வத்தையும் பன்மடங்கு அதிகரிக்க செய்யும், இதனை சரியாக பல யுடியூபர்கள் பயன்படுத்தி தன்னுடைய வீடியோவில் இதுபோன்ற ஓவர்லே களையும் டெக்ஸ்ட் கலையும் ஆட் செய்து எடிட் செய்வதன் காரணமாக யூடியூப்பில் நல்ல வளர்ச்சியை அடைந்து வருகின்றனர். 


Call to action | நடவடிக்கை எடுக்கச் செய்வது

நாம் பல youtube சேனல்களை பார்க்கும் பொழுது அதில் குறைந்த வீடியோக்களை பதிவு செய்து நல்ல பார்வையாளர்களையும் சப்ஸ்கிரைப் அவர்களையும் பெற்றிருப்பார்கள் இதற்கான காரணம் இந்த வீடியோவில் (Call to Action) கால் டு ஆக்சன் என்ற ஒரு எடிட்டிங் அவர்கள் பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணமாகும்.

இந்த கால் டு ஆக்சன் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம், குறிப்பாக நம் வீடியோவை பார்வையாளர்கள் பார்த்து முடித்த பின்னர் அவர்கள் நம் வீடியோ மீதான ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க செய்வதை ஆகும்.

குறிப்பாக அவர்கள் நம் வீடியோவிற்கு ஒரு லைக் போடுவது அல்லது சப்ஸ்கிரைப் செய்வது வீடியோவை பிறருக்கு ஷேர் செய்வது போன்ற ஏதேனும் ஒரு நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும், இது போன்ற விஷயங்களை பார்வையாளர்களுக்கு நம் வீடியோ மூலம் பதிவு செய்வதே இந்த கால் டு ஆக்சன் என்பதாகும். 

பொதுவாக யூடியூபில் பார்வையாளர்கள் எதைத் தேடி வருகின்றனோ அதை பற்றிய வீடியோக்களை முழுமையாக பார்த்த பின்னர் நம் வீடியோவை விட்டு வெளியேறி அடுத்தடுத்த வீடியோக்களை பார்க்க சென்று விடுவார் இதற்கு மாறாக நம் வீடியோவை அவர்கள் லைக் செய்வதற்கும் சப்ஸ்கிரைப் செய்வதற்கும் அல்லது ஷேர் செய்வதற்கும் நாம் நம் வீடியோவில் ஒரு பதிவினை இட வேண்டும், நம் வீடியோவின் நடுப்பகுதியிலோ அல்லது இறுதியிலே இதுபோன்று ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுப்பதற்காக அறிவுரை செலுத்த வேண்டும். 

இது அவர்களுக்கு ஒரு நினைவூட்டல் போல செயல்பட்டு நம் வீடியோவை லைக் செய்யவும் சப்ஸ்கிரைப் செய்யவும் அதிகப்படியான வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே நாம் எடிட் செய்யும் யூடியூப் வீடியோவில் இது போன்ற பகுதியை நிச்சயமாக இணைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். 


Screan Size And Quality | திரை அளவு மற்றும் வீடியோவின் தரம்

நாம் youtube வீடியோவை சரியான திரை அளவிற்கு எடிட் செய்து பின்னர் நல்ல தரமான குவாலிட்டியில் அப்லோட் செய்தல் வேண்டும்.

இதுபோன்று தரமான குவாலிட்டியில் வீடியோவை அப்லோட் செய்யும் பொழுது அந்த வீடியோ பல பார்வையாளர்களைப் பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. முடிந்தவரை வீடியோவின் குவாலிட்டியில் குறைகள் இல்லாமல் நல்ல குவாலிட்டியில் அப்லோட் செய்யுங்கள் இதுபோன்ற தரமான வீடியோ மக்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு இருப்பது மட்டுமில்லாமல் இந்த வீடியோவை பிற நபர்களுக்கு ஷேர் செய்யவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. 

உதாரணமாக நீங்கள் ஷார்ட்ஸ் Shorts போன்ற வீடியோக்களை பதிவு செய்ய 9:16 என்ற திரை அளவையும் youtube வீடியோவாக பதிவு செய்ய 16:9 என்ற திரை அளவையும் கொண்டு எடிட் செய்ய வேண்டும், வீடியோ குவாலிட்டி Video Quality 1080p (1920×1080) Pixels என்ற அமைப்பில் இருப்பது நல்லது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்