வீடியோ எடிட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி | How to make money with video editing
- YouTube Videos Editing
- By posting on social media
- Short film video editing
- Advertisement editing for shop
- Marriage and festival video editing
இப்போது அனைத்து விதமான மக்களிடமும் நிச்சயமாக ஒரு கைபேசி உள்ளது அந்த கைபேசியில் பல சமூக தளங்களும் உள்ளது இந்த சமூக தளங்களில் எந்தவித பதிவுகளை பதிவிட வேண்டும் என்றாலும் போதுமான அளவு ஆசை இருந்தால் மட்டும் பத்தாது மாறாக நமக்கு பல திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் இந்த அடிப்படை திறமைகளில் மிக முக்கியமான ஒன்று வீடியோ எடிட்டிங் ஆகும். இப்போதுள்ள காலத்தில் பல சாதாரண மனிதர்கள் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட முக்கிய காரணம் தன் திறமைகளை வீடியோவாக இதுபோன்ற சமூக தளங்களில் தொடர்ந்து அப்லோட் செய்வதாகும்.
இதுபோன்று சோசியல் மீடியாக்களில் வீடியோவை சாதாரணமாக எடுத்து அப்படியே அப்லோட் செய்யாமல் அதை மக்கள் பார்வையில் நன்றாக நம்மை வெளிப்படுத்த அதற்கு சிறந்த எடிட்டிங் பயன்படுத்தி நல்ல முறையில் எடிட் செய்து பின்னர் அப்லோட் செய்யும்பொழுது நமக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.
இது நம் வீடியோவை பிரபல படுத்தவும் பல வாய்ப்புகள் உள்ளது. இப்போது இந்த வீடியோ எடிட்டிங் பற்றிய தெளிவு மற்றும் இதன் முக்கியத்துவமும் உங்களுக்கு நன்றாக அறிந்திருக்கும். இப்படிப்பட்ட வீடியோ எடிட்டிங் கற்றுக் கொள்வதன் மூலம் நாம் இதுபோன்ற விஷயங்களில் மட்டும் பயன்படுத்தாமல் மாறாக பல வழிகளை பயன்படுத்தி நல்ல வருமானமும் ஈட்டலாம் என்பதே உண்மை!.
எனவே இந்த பதிவில் நாம் வீடியோ எடிட்டிங் ஐ பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்கான சில சிறப்பான வழிமுறைகளை பார்க்கலாம்.
யூடியூப் வீடியோ எடிட்டிங் | | YouTube Videos Editing
இப்போது நாம் பார்க்கும் இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் பல நபர்களுக்கு வீடியோ எடிட்டிங் செய்து கொடுப்பதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம், இப்போது பல மக்கள் தன் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள யூடியூப் தளத்தை நாடுகின்றனர் இந்த youtube தளத்தில் பல பதிவுகளை பதிவிடுகின்றனர்.
அவர்கள் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவர்களின் நல்ல வருமானத்தையும் பெறுகின்றனர். இவ்வாறாக இருக்க ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடர்ந்து பல வீடியோக்கள் அப்லோட் செய்வதனால் அவர்களுக்கு வீடியோ எடிட்டிங் செய்வதற்கான நேரம் குறைவாகவே இருக்கிறது, எனவே இது போன்று வீடியோ எடிட்டிங் செய்து தரக்கூடிய நபர்களை அவர்கள் நாடுகின்றனர்.
உங்களுக்கு யூடியூப் வீடியோக்களை எவ்வாறு எடிட் செய்வது மற்றும் அதனை திறம்பட எவ்வாறு கையாள்வது என்பதை பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ளும் பட்சத்தில் நீங்களும் இதுபோன்று பிற வீடியோ கிரியேட்டர்களுக்கு வீடியோக்களை எடிட் செய்து கொடுக்கலாம்.
இதில் பொதுவான எடிட்டிங் டூள்களை மட்டும் அறிந்து கொள்ளாமல் யூட்யூபில் இருக்கக்கூடிய சில விதிமுறைகளைப் பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக நாம் பயன்படுத்தக்கூடிய பாடல் அல்லது சவுண்ட் எபெக்ட் Sound Effects களில் காப்பிரைட்ஸ் ஏதேனும் உள்ளனவா என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல வீடியோக்களை தயார் செய்து கொடுத்தல் வேண்டும்.
இதைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் கற்று அறிந்து கொண்டால் பின்னர் இதை நீங்கள் பகுதி நேர பணியாக எடுத்துக் கூட நல்ல வருமானத்தை பெறலாம். கேமராவின் முன்பதாக நாம் எதைப் பற்றிய கருத்துகளையும் தெரிவித்து விடலாம் ஆனால் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை தெளிவாக மக்களுக்கு சலிப்பளிக்காமல் உற்சாகமாக பார்ப்பதற்கு நீங்கள் அந்த வீடியோவை எடிட் செய்து எவ்வாறு மக்களிடம் சேர்க்கிரிர்கள் என்பதே முக்கியம், எனவே இதன் முக்கியத்துவத்தை அறிந்து உங்கள் திறமைக்கு ஏற்றார் போல தொகையை நீங்களே நிர்ணயித்து வாங்கிக் கொள்ளலாம்.
இந்தத் தொழிலின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் உங்கள் நேர மேலாண்மையை பொறுத்து ஒரு நபருக்கு மட்டும் இல்லாமல் பிற பல கிரியேட்டர்களுக்கு எடிட் செய்து கொடுத்து வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்ளலாம்.
By posting on social media| சமூக தளங்களில் பதிவிடுவது
இதுவும் நம் முன்னர் பார்த்தது போலவே தான் ஆனால் இது நீங்கள் பிறருக்கு எடிட் செய்து கொடுக்காமல் நீங்களே உங்களுக்கென்று பல சமூக தளங்களை ஏற்படுத்திக் கொண்டு அதில் உங்களுக்கு தெரிந்தனவற்றை பிறருக்கு தெரிவித்து அதனை வீடியோவாக எடிட் செய்து அப்லோட் செய்யலாம்.
உதாரணமாக உங்களுக்கு தெரியும் வீடியோ எடிட்டிங் பற்றிய கருத்துக்களையும் மற்றும் அதன்குறிப்புகளை வீடியோவாக தயார் செய்து அதனை ஆன்லைன் வகுப்பாக எடுக்கலாம்.
இதுபோன்று வகுப்புகளை எடுப்பது உங்களுக்கு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை தாண்டி நீங்கள் பதிவிடப்படும் சோசியல் மீடியாக்களிலும் விளம்பரதாரர்கள் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.
எளிமையாக கூற வேண்டும் என்றால் இதுவும் உங்களுக்கு பன்முக வருமானத்தை அளிக்கக்கூடிய வழியாகும். இந்த முறைகளை பயன்படுத்தி தான் பல நபர்கள் தன் திறமைகளை வீடியோவாக எடிட் செய்து சமூக தளங்களில் பதிவிடுவதால் பிரபலமாகின்றர்.
எனவே உங்கள் வீடியோ எடிட்டிங் திறமைகளை இதுபோன்ற சமூக தளங்களில் பயன்படுத்தி நல்ல வருமானத்தை பெறுங்கள்.
Short film video editing | குறும்பட வீடியோ எடிட்டிங்
பெரிய பெரிய திரைப்படங்கள் எடுப்பதற்கு வீடியோ எடிட்டர்கள் இருப்பது போல குறும்படங்கள் எடுப்பதற்கும் வீடியோ எடிட்டர்கள் மிக மிக முக்கியமானவர்களாவர். மற்றும் பெரிய திரைப்படங்களில் அவர்கள் முன்னதாகவே பல எடிட்டர்களை வைத்திருப்பார்கள் ஆனால் குறும்படங்கள் என்பது பல நபர்களால் எடுக்கப்பட்டு வருகிறது இவர்களுக்கு போதுமான அளவு எடிட்டிங் பற்றிய திறமை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக ஒரு படத்தின் கதையை மட்டும் வைத்துக் கொண்டு வீடியோக்களை எடுக்கின்றனர்.
இதுபோன்று புதிதாக பல இயக்குனர்கள் தோன்றத் தோன்ற உங்களுக்கும் வீடியோ எடிட்டிங் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும், இதனை சரியாகப் பயன்படுத்தி அவர்களிடம் வாய்ப்பு கூறும் பொழுது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நல்ல வருமானத்தை பெறலாம்.
இவர்களை நீங்கள் வெளியில் தேடி எங்கும் அலையப்போவதில்லை மாறாக இவர்கள் எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தையும் குறிப்பாக youtube தளத்தில் தான் பதிவு செய்கின்றனர், எனவே இது போன்ற தளங்களில் அவர்களை கண்டறிந்து நீங்கள் அணுகலாம். இதுபோன்ற படங்களை தயார் செய்ய பல நாட்கள் ஆகலாம். இதுபோன்ற பல நாட்களில் எடுக்கப்படும் வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து எடிட் செய்வதன் மூலம் தொடர்ந்து நல்ல வருமானத்தை பெறலாம்.
Advertisement editing for shop | கடைக்கான விளம்பர எடிட்டிங்
நீங்கள் தொலைக்காட்சி அல்லது மொபைல் போனை பயன்படுத்தும் பொழுது அதில் பல நிறுவனங்களின் பெரிய பெரிய விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். இதை பெரிய பெரிய நிறுவனங்கள்தான் செய்ய வேண்டும் என்பதல்ல மாறாக உங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய பல துணி கடைகளும் அல்லது நகை கடைகளும் கூட இது போன்ற வீடியோக்களை தயார் செய்து அவர்களின் வாடிக்கையாளர்களின் பெருக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
எனவே நீங்கள் இதுபோன்ற சில கடைகளை அணுகி அவர்களின் விருப்பத்தை கேட்டு அதற்கு ஏற்றார் போல விளம்பர வீடியோக்களை எடிட் செய்து அளிப்பதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம், இப்போது மக்கள் வளர்ச்சிக்கு ஏற்றார் போல சாலைகளில் பலவிதமான கடைகளை நாம் பார்க்கிறோம்.
இந்த அனைத்து கடைகளையும் நீங்கள் அணுகலாம் இதில் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். இது போன்ற விளம்பர எடிட்டிங் வாய்ப்புகள் உங்களுக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய எடிட்டிங் ஐ பற்றிய மாடல்களை உங்கள் அடுத்தடுத்து வரக்கூடிய கடைக்காரர்களிடம் காண்பித்து ஏற்படுத்திக் கொள்ளலாம். இது போன்று மாதம் இரண்டு வீடியோக்கள் தயார் செய்து கொடுத்தால் கூட நல்ல வருமானத்தை பெறலாம்.
நீங்கள் எந்த அளவுக்கு வாய்ப்புகளை அதிகம் பெற்று பல நபர்களுக்கு வீடியோ எடிட்டிங் செய்து அளிக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல பல மடங்கு உங்கள் வருமானத்தை பெருக்கிக் கொண்டு நல்ல வருமானத்தை பெறலாம்.
இதுபோன்று விளம்பர வீடியோக்களை இதுநாள் வரையும் தயார் செய்யாத கடைகளை அணுகும் பொழுது அவர்களுக்கு இது பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மற்றும் பிற நிறுவனங்களுக்கு நீங்கள் எடிட் செய்து அளித்த மாடல்களை காண்பித்தும் ஒப்புக்கொள்ள செய்யலாம்.
இதற்கு வீடியோ எடிட்டிங் உடன் உங்களுக்கு சற்று பேச்சு திறமையும் தேவைப்படும் இதை சரியாக கையாண்டு விட்டால் உங்கள் வருமானம் நிச்சயமாக பெருக்கிக் கொள்ளலாம். இந்தப் பணியையும் நீங்கள் முழு நேர பணியாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை மாறாக இதனை பகுதி நேர பணியாக செய்து கூட கூடுதல் வருமானத்தை பெறலாம்.
Marriage and festival video editing | திருமணம் மற்றும் திருவிழா வீடியோ எடிட்டிங்
திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகள் என்பது மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய ஒரு விஷயமாகும், இது போன்ற விழாக்களை அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்ப்பதற்கு வீடியோ என்பது மிக முக்கியமான ஒன்றாகும், அது மட்டும் இல்லாமல் இது போன்ற விழாக்களில் நடக்கும் மகிழ்ச்சியான தருணங்களை மக்கள் சமூக தளங்களில் பதிவிடுவதற்கும் இந்த வீடியோ என்பது மிக அவசியமாக தேவைப்படுகிறது.
எனவே இதுபோன்ற வீடியோக்களை நீங்கள் எடிட் செய்து அளிப்பதன் மூலமாக கூட நல்ல வருமானத்தை பெறலாம். இதற்கு முதலில் எந்தெந்த இடங்களில் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்வுகள் நடக்கிறது என்பதை பட்டியல் செய்து கொள்ள வேண்டும், பின்னர் இது போன்ற நபர்களை அணுகி அவர்களிடம் வாய்ப்பு பெற்று எடிட் செய்து கொடுத்து நல்ல வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இது போன்ற வாய்ப்புகளை பெற இயலவில்லை என்றால், பிற ஸ்டுடியோக்கள் இதுபோன்ற நிகழ்வுகளை வீடியோக்கள் எடுத்து எடிட் செய்து அளிப்பார்கள் அவர்களை அணுகி அவர்கள் எடுக்கப்படும் வீடியோக்களை பெற்று நீங்கள் எடிட் செய்து அளிக்கலாம் இது அவர்களுக்கு நேரத்தை குறைப்பதன் காரணமாக உங்களுக்கு வாய்ப்பு அளிக்க அதிக சாத்தியங்கள் உள்ளது, இதனை சரியான முறையில் பயன்படுத்தியும் நல்ல வருமானத்தை பெறலாம்.

0 கருத்துகள்