How to start a successful business | வெற்றிகரமான தொழிலை எவ்வாறு தொடங்குவது
- Write your business plan
- Who is your target?
- Who is your competitor?
- Who are your supplier?
- What is your daily operation?
இப்போது பல்வேறு மக்கள் புதிய தொழில் தொடங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர் ஆனால் அவர்கள் ஆரம்பித்த தொழிலை தொடர்ந்து செய்ய இயலாமல் பாதியிலேயே முயற்சியை கைவிட்டு விடுகின்றனர். குறிப்பாக புதிய தொழிலை ஆரம்பிக்கும் 100% மக்களில் 70 சதவீதமான மக்கள் தோல்வியடைகின்றனர், இது போன்று தோல்வி அடையாமல் தொழிலை சிறப்பான முறையில் ஆரம்பித்து எவ்வாறு நிர்வகித்து நடத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Write your business plan | உங்கள் வணிகத் திட்டத்தை எழுதுங்கள்
நீங்கள் தொழில் தொடங்குவதில் முதல் கட்ட பணியே இதுதான் முதலில் நீங்கள் என்ன விதமான தொழிலை ஆரம்பிக்கப் போகிறீர்கள் மற்றும் அந்த தொழிலில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதையெல்லாம் முதலில் உங்களது பிசினஸ் பிளான் ஆக ஒரு கட்டுரை தயார் செய்யுங்கள்.
இதுபோல் உங்கள் தொழிலுக்கான திட்டங்களை கட்டுரையாக எழுதிப் பார்க்கும் பொழுது இந்தத் தொழில் நடைமுறையில் எப்படி சாத்தியமாக இருக்கும் என்பதை பற்றியும் மற்றும் இதன் உண்மை நிலை பற்றியும் நம்மால் எளிமையாக பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் தொழில் திட்டத்தை மனதில் வைப்பதை விட எழுதிப் பார்ப்பதே மிகச் சிறப்பான வழியாகும் ஏனென்றால் எழுதிப் பார்க்கும் பொழுது நமக்கு புதிய புதிய சிந்தனைகளும் தோன்றலாம் இந்தத் திட்டத்தில் ஏதேனும் பிழை இருக்கும் பட்சத்தில் அதை திருத்திக் கொள்ளவும் அல்லது மாற்றிக் கொள்ளவும் நமக்கு மிக உதவியாக இருக்கும்.
இதில் உங்கள் மேலோட்ட திட்டத்தை மட்டும் எழுதாமல் நீங்கள் உங்கள் தொழிலில் என்னென்ன புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்தப் போகிறீர்கள் என்பதையும் தெளிவாக எழுதிப் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொழிலை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் பொழுது ஏதேனும் தவறாக போகும் பட்சத்தில் நீங்கள் முதலில் எழுதிப் பார்த்த இந்த கட்டுரையை படித்து அதனை சரி செய்து கொள்ளலாம் மற்றும் இது உங்கள் குறிக்கோளை எளிமையாக அடையவும் மற்றும் தொழிலில் கவனச் சிதறல்களை குறைக்கவும் பெருமளவு பங்காற்றும்.
Who is your target? | உங்கள் இலக்கு யார்?
உங்கள் தொழிலின் குறிக்கோள் யார் என்பதை நன்கு அறிந்து கொள்ள வேண்டும், உங்கள் தொழில் பொருள் அல்லது சேவை என எந்த வித பொருட்களை அளித்தாலும் உங்கள் அளிப்பை யார் பெறுவர் என்பதை நன்கு அறிவது மிக முக்கியமாகும். உதாரணமாக நீங்கள் ஒரு பொருளை விற்க வேண்டும் என்றால் அந்தப் பொருள் யாருக்கு தேவைப்படுகிறது எவ்வளவு மற்றும் எப்படி தேவைப்படுகிறது என்ற எல்லா விஷயங்களையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் தொழில் ஆரம்பிப்பதற்கு முன்னரே உங்களின் வாடிக்கையாளர் யார் எங்கெங்கு இருக்கிறார்கள் அவர்களின் விருப்பம் எவ்வாறாக உள்ளது என்பதையெல்லாம் நன்கு கற்று தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்னரே உங்கள் பொருள் மற்றும் சேவைக்கு தேவையான வடிகையாளர்களின் விருப்பம் மற்றும் அவர்களின் தேவைகளை நன்கு புரிந்து செயல்பட்டீர்கள் என்றால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலில் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
Who is your competitor? | உங்கள் போட்டியாளர் யார்?
உங்கள் தொழிலில் உங்களுக்கு எவ்வளவு போட்டியாளர்கள் உள்ளார்கள் என்பதை பற்றியும் மற்றும் அவர்களின் வலிமை எவ்வாறு உள்ளது என்பதை பற்றியும் முன்னரே அறிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக உங்கள் தொழிலில் அவர் மிக வலிமையான போட்டியாளராக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் இல்லாத விஷயத்தை உங்கள் தொழிலில் அறிமுகம் படுத்துவது மிகச் சிறப்பான வழியாக இருக்கும் இதனால் தான் இந்த போட்டியாளர்களைப் பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது மற்றும் இவர்களின் குறை நிறை என அனைத்து விஷயங்களையும் நன்கு ஆலோசனை செய்து பார்க்க வேண்டும்.
நீங்கள் போட்டியாளர்களை பற்றி அறியாமல் ஒரு தொழிலை தொடங்கும் பொழுது அந்த தொழிலில் வெற்றி பெற பல கடினமான உழைப்புகளை நீங்கள் கொடுக்க வேண்டும் இப்படி கடினமான உழைப்பை உங்களால் போட இயலாவிட்டால் தொழில் களத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கூட வரலாம்.
இதனை அறியாமல் தான் பலரும் புதிய தொழில்களை ஆரம்பித்து குறைந்த நேரத்திலேயே தொழிலை விட்டு விடுகின்றனர். நீங்கள் ஒரு வெற்றிகரமான தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்றால் மக்கள் பார்வையில் உங்களின் போட்டியாளர்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்பதனையும் தொழில்களில் எவ்வளவு முன்னேற்றத்தில் இருக்கின்றனர் என்பதனையும் அறிந்து அதற்கு ஏற்றார் போல நமது தொழில் திறனை மேம்படுத்தி செயல்பட வேண்டும்.
Who are your supplier? | உங்களுக்கு அளிப்பவர் யார்?
நீங்கள் தொழில் செய்வதற்கு மூலப்பொருள் அளிப்பவர் யார் என்பதைப் பற்றியும் அவர் வேறு யார் யாருக்கு மூலப்பொருட்களை அளித்து வருகிறார் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுபோல் நமக்கு மூலப் பொருட்களை அளிப்பவரை பற்றி ஆலோசனை செய்து கொள்வது நம் தொழிலை சிறப்பாக நடத்த பெருமளவு உதவி செய்யும். ஏனென்றால் மூலப் பொருட்கள் என்பது ஒரு தொழிலை தொடங்குவதற்கு மிக முக்கியமான ஒன்றாகும் மூலப்பொருள் குறைந்து விட்டால் அந்த தொழில் சரியாக இயங்காது எனவே தான் மூலப்பொருள் சரியான விலையில் சரியான நேரத்தில் கிடைக்குமாறு இருக்க வேண்டும்.
உங்கள் வியாபார நிலை மேலோங்கி சென்று கொண்டிருக்கும் பொழுது மூலப்பொருள் பற்றாக்குறையால் உங்கள் தொழிலை குறைத்துக் கொள்ளக் கூடாது, எனவே உங்களுக்கு எப்பொழுதும் தேவையான அளவிற்கு மூலப்பொருள் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நம் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் அளிப்பவர் ஒருவரை மட்டுமே நம்பாமல் இரு வேறு இடங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இது போன்று அளிப்பு பற்றாக்குறையால் கூட நாம் தொழிலை நடத்த இயலாமல் பாதியில் கைவிட வேண்டிய வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
What is your daily operation? | உங்கள் தினசரி செயல்பாடு என்ன?
உங்கள் தொழிலை மேம்படுத்த தினசரி என்னென்ன செயல்களை செய்ய வேண்டும் என்பதை முன்னரே அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும், உங்கள் தொழிலாளர்கள் என்னென்ன தினசரி பணிகளை செய்ய வேண்டும் என்பதனையும் எந்த பணிக்கு முன்னுரிமை அளித்தால் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்பதனையும் அறிந்து அந்த வேலைகளை தயார் செய்து தினமும் அளித்தல் வேண்டும், மற்றும் பிற தொழிலதிபர்களின் தினசரி பணி எவ்வாறு உள்ளது என்பதை பற்றியும் நம் தினசரி பணியுடன் ஒப்பிட்டு பார்த்து அதற்கு ஏற்றார் போல நம் தினசரி பணியை செயல்படுத்த வேண்டும்.
நம் தினசரி பணி நம் தொழிலின் குறிக்கோளை அடையும் படியாக இருந்தால் மட்டுமே நம் தொழிலை சிறப்பாக செயல்படுத்த முடியும் மாறாக நம் தினசரி பணி தவறாக இருக்கும் பட்சத்தில் நம் தொழிலை சிறப்பாக நடத்த இயலாமல் சென்றுவிடும். இந்த தினசரி பணியை தொடர்ந்து திறமையாக செய்து கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நம் தொழில் மிக உயரத்தை சென்று அடையும்.

0 கருத்துகள்