How to Edit a Video? | வீடியோ எடிட் செய்வது எப்படி?
இந்தப் பதிவில் வீடியோ எடிட்டிங் என்றால் என்ன வீடியோ எடிட்டிங் எதற்கு தேவைப்படுகிறது, என்னென்ன டூள்களை (Tools) பயன்படுத்தி வீடியோக்களை எடிட் செய்யலாம் என்று முழு விவரங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.இந்த பதிவை முழுமையாக படித்து முடிக்கும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு வீடியோ எடிட்டிங் பற்றிய தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
What is video editing? | வீடியோ எடிட்டிங் என்றால் என்ன?
வீடியோ எடிட்டிங் என்பது நாம் கேமராவினால் எடுக்கப்பட்ட வீடியோக்களை முறையாக பார்ப்பதற்கு ஏற்றார் போல பிழை திருத்தம் செய்து அழகூட்டும் விஷயமாகும். இதனைப் பயன்படுத்தி நாம் எடுக்கப்பட்ட வீடியோவில் உள்ள தேவையற்ற விஷயங்களை நீக்குவதற்கும் அல்லது தேவையுள்ள விஷயங்களை சேர்த்துக் கொள்ளவும் முடியும்.
பொதுவாக நமக்கு வீடியோ எப்படி வேண்டும் என்பதை ஏற்றார் போல அமைத்துக் கொள்ள முடியும். இப்போது வீடியோ எடிட்டிங் என்பது மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அசாத்தியமான விஷயங்களையும் எளிமையாக சாத்தியமாக மாற்ற முடிகிறது.
Why is video editing necessary? | ஏன் வீடியோ எடிட்டிங் தேவைப்படுகிறது?
- Joined / Merge / Add / Import
- Filter / Adjust / Color Correction
- Effect / Fx
- Text
- Transition Effect
- Cut /Split / Trim
- Chroma Key
- Cropping
- Animation
- Rotate
- Zoom
- Layers
- Screen Size
- Speed
- Mic / Voice
- Export / Save
நாம் பல இயற்கை சார்ந்த இடங்களுக்கும் அல்லது பல நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் பொழுது அதன் நிகழ்வுகளை கேமராவிலோ அல்லது மொபைல் போன்களிலோ பதிவு செய்து வைக்கிறோம், ஆனால் நாம் அந்த நிகழ்வை விட்டு வெளியேறி அந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது மனதிற்கு பிடித்தவாறு அந்த வீடியோ அமையவில்லை எனில் நாம் மீண்டும் அந்த நிகழ்வை சந்தித்து அதன் போல் வீடியோக்களை எடுக்க இயலாது இதனால் தான் வீடியோவை எடிட் செய்து நாம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து வைத்துக் கொள்ளகிறோம்.
மற்றும் நம் வீடியோ எடுக்கும் பொழுது நம் மனதிற்கு ஏற்றவாறான சூழ்நிலை அங்கு அமையவில்லை எனில் நாம் வீடியோ எடுத்த பின்னர் அந்த சூழ்நிலைகளை எடிட்டிங் மூலம் நாம் அமைத்து வைத்துக் கொள்ளவும் இது மிகவும் உதவியாக உள்ளது.
இந்த வீடியோ எடிட்டிங் கை சரியாக கற்றுக்கொண்டு எடிட் செய்யும்பொழுது நாம் நினைத்துக் கூட பார்க்க இயலாத இடங்களில் எல்லாம் சென்றவாறு நம்மை மாற்றி எடிட் செய்து கொள்ள முடியும்.
இது மட்டும் இல்லாமல் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கும் தேவையுள்ள பகுதிகளில் சேர்ப்பதற்கும் தேவையற்ற இறைச்சல்களை நீக்குவதற்கும் நமக்கு வேண்டிய சத்தங்களை இதில் சேர்க்க என பல விஷயங்களில் வீடியோ எடிட்டிங் நமக்கு தேவைப்படுகிறது. பொதுவாக வீடியோ எடிட்டிங் என்பது நாம் எடுக்கப்பட்ட வீடியோவை மேலும் அழகு ஊட்டவும் அல்லது நமக்கு ஏற்றார் போல வடிவமைத்துக் கொள்ளவும் பெரும் அளவு உதவி செய்கிறது. இந்த வீடியோ எடிட்டிங்கை முழுமையாக கற்றுக் கொள்ளும் பொழுது இது பல வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்தி உங்களால் வருமானமும் ஈட்ட பெருமளவு உதவி செய்கிறது. வீடியோ எடிட்டிங்கை பயன்படுத்தி எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்ற விவரத்தை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.
இப்போது வீடியோ எடிட்டிங் செய்வதற்கு பொதுவாக தேவைப்படும் அடிப்படை அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம். வீடியோவினை எடிட் செய்ய பலவிதமான டூள்கள் உள்ளன இருப்பினும் நான் பொதுவாக தேவைப்படும் டூல்களைப் Tool பற்றி மட்டுமே கூறுகிறேன்.
Cut /Split / Trim
மேற்கூறிய அனைத்து கருவிகளும் ஒரே கருவியாகும் ஆனால் நீங்கள் பயன்படுத்தும் எடிட்டர் ஆப்களுக்கு ஏத்தவாறு இதன் பெயர் மாறுபாடு அடையலாம். இந்த Split என்ற அம்சம் நம் வீடியோவில் தேவைப்படாத பகுதியை நீக்குவதற்கு உதவி செய்கிறது. இது எடிட் செய்வதில் முக்கியமான அடிப்படை அம்சமாகும்.
Joined / Merge / Add / Import
இந்தத் டூள்கள் நீங்கள் எடிட் செய்ய விரும்பும் வீடியோவினை எடிட்டிங் செய்யும் ஆப்களுக்குள் செலுத்துவதற்கு பயன்படுகிறது, மற்றும் இது துண்டிக்கப்பட்ட வீடியோவினை இணைப்பதற்கும் மற்றும் புதிதாக வேறு சில மெட்டீரியல்களை வீடியோவுடன் இணைப்பதற்கும் பயன்படுகிறது.
இது வீடியோ எடிட்டிங் இல் அதிகம் பயன்படும் டூலாகும், இதை பயன்படுத்தியே நம் வீடியோவில் இணைக்கப்படும் ஒவ்வொரு விஷயங்களையும் இணைக்க முடிகிறது. உதாரணமாக நாம் எடிட் செய்யும் வீடியோவில் சத்தம் இணைப்பது அல்லது புகைப்படத்தை இணைப்பது போன்ற எல்லாவற்றிற்கும் இதுவே உதவுகிறது.
Filter / Adjust / Color Correction
இந்த டூள்கள் அனைத்தும் நாம் எடிட் செய்யும் வீடியோவின் நிறத்தை மேம்படுத்தவும் அல்லது நிறத்தில் மாறுபாடு செய்யவும் பயன்படுகிறது.
இது நீங்கள் எடிட் செய்யும் வீடியோவின் அழகை மேம்படுத்த பெரும் அளவு உதவி செய்கிறது, இந்த கலர் கரெக்ஷன் என்ற அம்சத்தின் உள் பல உள் அம்சங்கள் உள்ளன.
உதாரணமாக( brightness, contrast, saturation, temperature, highlight, shadow, Hue ) இதில் இருக்கக்கூடிய அத்தனை வகைகளையும் நீங்கள் முறையாக கற்றுக் கொண்டால் நீங்கள் நினைத்துக் கூட பார்க்க இயலாத வகையில் வீடியோவை தயார் செய்ய இயலும்.
Effect / Fx
இந்த எபெக்ட் Effect என்பது நீங்கள் வீடியோவில் செய்யவிருக்கும் மாறுதலை குறிக்கிறது.இந்த எஃபெக்ட் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்கள் வீடியோ அதிர்வது போலவோ அல்லது மின்னுவது போலவோ அசைவது போலவோ என பல விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும், பொதுவாக இந்த எஃபெக்ட் என்ற ஆப்ஷன் நீங்கள் பயன்படுத்தும் எடிட்டர் ஆப்களை பொறுத்து மாறுபாடு அடையும்.
Text
இந்த டெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோவில் ஏதேனும் எழுத்தை இணைக்க விரும்பினால் இணைத்துக் கொள்ளலாம்.
இது உங்கள் வீடியோவை ஆரம்பிக்கும் பொழுது Introduction போலவும் அல்லது முடிக்கும் பொழுது End Title போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம், மாறாக உங்கள் தனித்திறமையை பொறுத்து உங்களுக்கு எந்தெந்த இடத்தில் எழுத்துக்கள் வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு இணைத்து நல்ல வீடியோக்களை தயார் செய்யலாம்.
Transition Effect
இது நீங்கள் வீடியோ எடிட்டர் ஆப்களுக்குள் இணைக்கப்படும் வீடியோ அல்லது போட்டோக்களுக்கு இடையே கொடுக்கப்படும் எபெக்ட் ஆகும்.
இது நீங்கள் கட் செய்த பகுதிகள் உடனடியாக மாறும் பொழுது ஏற்படக்கூடிய அதிர்வினை குறைத்து வீடியோ பார்ப்பதற்கு ஒரே வீடியோ போலான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இது நீங்கள் கட் செய்த வீடியோ அல்லது புகைப்படம் இணைப்பதற்கு ஒரு உதவியான அம்சமாகும்.
Chroma Key
இந்த குரோமா கி Chroma Key என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நம் வீடியோவில் அசாத்தியமான விஷயங்களை ஏற்படுத்திக் காட்ட முடியும்.
இதனைப் பயன்படுத்தி பல பிரபலமான இயக்குனர்கள் தன் படத்தில் அதிரடியான காட்சிகளை தயார் செய்கின்றனர். இதற்கு முதலில் பச்சை நிற துணியின் முன்னால் வீடியோவை எடுத்து அந்த பச்சை நிறத்தை எடிட்டிங் இல் நீக்கம் செய்து அதற்கு பதிலாக வேறு ஏதேனும் பேக்ரவுண்டை BACKGROUND அட் Add செய்வதே இந்த குரோமோகீயின் Chroma Key சிறப்பம்சம் ஆகும்.
Cropping
கிராப் என்பது திரையில் தேவையற்ற பகுதியை குறைத்து தேவைக்கேற்ப சரி செய்து கொள்வதாகும், இதுவே நம் திரை அமைப்பை சரி செய்ய பெருமளவு உதவி செய்கிறது மற்றும் தேவையற்ற விஷயங்களை திரையில் இருந்து மறைக்கவும் நமக்கு உதவுகிறது.
Animation
அனிமேஷன் என்பது நம் வீடியோவில் ஏதேனும் புதிதாக ஒன்றை சேர்த்து அதன் அசைவை அல்லது செயல்பாட்டை இணைப்பதே இந்த அனிமேஷன் என்ற அம்சமாகும்.
இந்த அனிமேஷன் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நம் வீடியோவில் தேவைக்கேற்ப அழகான சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
Rotate
இந்த ரொட்டேஷன் என்ற ஆப்ஷன் நம் எடிட் செய்யும் வீடியோவை நம் விருப்பத்திற்கு ஏற்ப திருப்பிக் கொள்ள பயன்படுகிறது.
நாம் வீடியோ எடுக்கும் பொழுது கேமராவை திருப்பி சரியான திசையில் எடுக்கவில்லை என்றாலும் எடிட்டிங் மூலம் சரியான திசைக்கு கொண்டு வர இந்த ரொட்டேஷன் தேவைப்படுகிறது.
Zoom
ஜூம் என்ற அமைப்பு நம் வீடியோவில் சில விஷயங்களை விரிவுபடுத்திக் காட்ட பெருமளவு உதவி செய்கிறது, இது நம் கேமராவில் வீடியோ எடுக்கும் பொழுதே ஜூம் ஆப்ஷனை பயன்படுத்த தவறும் பொழுது எடிட்டிங் மூலம் நாம் தேவையானவற்றை விரிவுபடுத்த உதவுகிறது.
Layers
லேயர்ஸ் என்பது நம் வீடியோவை அழ கூட்ட நாம் மேன்மேலும் இணைக்கப்படும் மெட்டீரியல்களை குறிக்கிறது, நீங்கள் உங்கள் வீடியோவை அழகாக மேம்படுத்தி காட்ட வேறு சில வீடியோக்களை இந்த வீடியோவுடன் இணைந்தாலும் அல்லது வேறு ஏதாவது எழுத்துக்களை அல்லது பாடல்களை இணைப்பதற்கும் இந்த லேயரை பயன்படுத்த வேண்டும்.
இந்த லேயர் என்பது நம் வீடியோவில் இணைக்கப்படும் பொருட்களை குறிக்கும் ஒன்றாகும்.
Screen Size
இதுவே நாம் எடிட் செய்யும் வீடியோ எந்த திரையளவில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது எனவே உங்களுக்கு எந்த அளவில் வீடியோ வேண்டும் என நினைக்கிறீர்களோ இந்த ஆப்ஷனை பயன்படுத்தி திருத்தம் செய்து கொள்ளலாம்.
குறிப்பாக நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்து வீடியோவும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே செயல்படுகிறது அதற்கு ஏற்றார் போல நீங்கள் எடிட் செய்யும் வீடியோவின் அளவை மாற்ற இது உதவுகிறது.
Speed
இது நீங்கள் எடிட் செய்யும் வீடியோவின் வேகத்தை கூட்டவும் குறைக்கவும் பயன்படுகிறது, இதனை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேகத்தை சரி செய்து கொள்ள முடியும்.
Mic / Voice
இந்த மைக் ஆப்ஷன் நீங்கள் எடிட் செய்ய வீடியோவில் உங்கள் குரலை பதிவு செய்ய பயன்படுகிறது, வீடியோவை எடுத்து முடித்த பிறகு அந்த வீடியோவில் நீங்கள் என்ன பேச விரும்புகிறீர்களோ இந்த குரல் பதிவு செய்யும் மைக் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
Export / Save
இந்த சேவ் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்து முடித்த வீடியோவை உங்கள் கேலரிக்கு சேவ் செய்து கொள்ளலாம். இதுவே நீங்கள் எடிட் செய்து முடித்த பின்னர் இறுதியாக செய்யக்கூடிய அமைப்பாகும் இதில் உங்கள் வீடியோவின் தரத்தை சரிபார்த்து நீங்கள் முறையாக உங்கள் கேலரிக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
நான் இப்போது இந்த பதிவில் வீடியோ எடிட்டிங் செய்வதற்கான சில அம்சங்களை மட்டுமே கூறியுள்ளேன், இதுவே நீங்கள் வீடியோ எடிட்டிங் செய்வதற்கான அடிப்படை கருவிகள் ஆகும்.
இதனை முதலில் முறையாக கற்றுக் கொண்டு உங்களுக்கு தேவையான வீடியோக்களை எடிட் செய்ய முடியும், பின்னர் உங்கள் வீடியோ எடிட்டிங் திறமையை மேம்படுத்தவும் அல்லது புதுமைகளை ஏற்படுத்தவும் வீடியோ எடிட்டிங் பற்றிய முழு விவரங்களை கற்றுக் கொள்ளலாம்.

0 கருத்துகள்